குன்றத்தூர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்- வாகன ஓட்டிகள் அவதி

 

குன்றத்தூர் கோயிலில்  அலைமோதிய பக்தர்கள் கூட்டம்- வாகன ஓட்டிகள் அவதி

சென்னை

ஆங்கில புத்தாண்டையொட்டி, குன்றத்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக் கணக்கானோர் திரண்டதால் கூட்டம் அலைமோதியது. சென்னை அடுத்த குன்றத்தூர் முருகன் கோயிலில், புத்தாண்டை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதற்காக காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

குன்றத்தூர் கோயிலில்  அலைமோதிய பக்தர்கள் கூட்டம்- வாகன ஓட்டிகள் அவதி

மேலும், அபிஷேகம் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் சுவாமியை தரிசனம் செய்வதற்காக குன்றத்தூர் மற்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே வந்து காத்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்து கொண்டு சென்று சாமியை தரிசனம் செய்ய முற்பட்டனர். மேலும், கொரோனா அச்சத்தையும் மறந்து ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டு சாமி தரிசனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்றத்தூர் கோயிலில்  அலைமோதிய பக்தர்கள் கூட்டம்- வாகன ஓட்டிகள் அவதி

இந்த நிலையில், சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னை சுற்றுவடடார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இருசரக்க மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் படையெடுத்தால் குன்றத்தூரில் இருந்து கோயிலுக்கு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், போக்குவரத்தை ஒழுங்கு செய்ய போலீசார் இல்லாததால் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.