சூடுபிடிக்கும் அரசியல் களம் : அதிமுக இன்று முக்கிய ஆலோசனை!

 

சூடுபிடிக்கும் அரசியல் களம் : அதிமுக இன்று முக்கிய ஆலோசனை!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று அதிமுக நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறுகிறது.

சூடுபிடிக்கும் அரசியல் களம் : அதிமுக இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்ட பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்கு தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக – அதிமுக கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திமுக – அதிமுக கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை நியமித்துள்ளது.

சூடுபிடிக்கும் அரசியல் களம் : அதிமுக இன்று முக்கிய ஆலோசனை!

இந்நிலையில் இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வர உள்ள நிலையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஆலோசனை மேற்கொள்கின்றனர். சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு போன்றவை குறித்து அதிமுக ஆலோசனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.