மாரடைப்பு வந்தால் சமாளித்து மருத்துவமனை செல்வது எப்படி?

 

மாரடைப்பு வந்தால் சமாளித்து மருத்துவமனை செல்வது எப்படி?

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனாவில் இருந்து மீண்ட பல நோயாளிகளும் நெஞ்சு வலி இருப்பதாகக் கூறுவதைக் கேட்கிறோம். இந்த சூழலில் மாரடைப்பு வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்று பார்ப்போம்!

மாரடைப்பு வந்தால் சமாளித்து மருத்துவமனை செல்வது எப்படி?

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது முக்கியம்.

ஒருவருக்கு நெஞ்சு வலி, நெஞ்சில் இருக்கம், நெஞ்சின் மையப் பகுதியில் கசக்கிப் பிழிவது போன்ற உணர்வு

தோள்பட்டை, கை, முதுகு, கழுத்து, தாடை, பற்கள் அல்லது மேல் வயிற்றுப் பகுதியில் வலி அல்லது அசௌகரியம்

குமட்டல், செரிமானப் பிரச்னை, நெஞ்செரிச்சல், வயிற்று வலி

மூச்சுத் திணறல்,

தலைவலி, தலைசுற்றல், மயக்கம்

வியர்வை ஆகிய அறிகுறிகள் இருந்தால் அவருக்கு மாரடைப்பு வந்திருக்கலாம் என உணர்ந்துகொள்ளலாம்.

வேகவேகமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அருகில் உள்ளவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி கேட்கலாம். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை மென்று விழுங்க வேண்டும். இது ரத்தம் உறைவதைத் தடுக்கும். மாரடைப்பின் பாதிப்பை குறைக்க உதவும்.

நோயாளி மயங்கிவிட்டார், மூச்சு இல்லை என்றால் சி.பி.ஆர் என்ற முதலுதவியை செய்ய வேண்டும். அதாவது, நெஞ்சுப் பகுதியில் கையை வைத்து அழுத்துவது, மூக்கை பிடித்துக்கொண்டு வாயில் காற்றை ஊதுவது போன்ற முதலுதவியை செய்யலாம். இந்த முதலுதவியைச் செய்யத் தெரிந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். அனைவரும் முயல வேண்டாம். அது வேறுவிதமான பாதிப்பை ஏற்படுத்திவிடலாம்.

நோயாளி விழிப்புடன் இருந்தால் வாகனம் வரும் வரை அவரை அமைதிப்படுத்தி உட்காரவோ அல்லது படுக்கவோ வைக்க வேண்டும். காற்றோட்டம் நன்றாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஆஸ்பிரின் மாத்திரை போட்டுக்கொள்ள சொல்லுங்கள்.

குறிப்பு: சி.பி.ஆர் என்பது கற்பதற்கு மிகவும் கடினமான முதலுதவி பயிற்சி இல்லை. செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அவசர நிலை சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் சில இந்த பயிற்சியை வழங்குகின்றன. முதலுதவி பயிற்சி பெற விரும்புகிறவர்கள் அவர்களைத் தொடர்புகொண்டு பயிற்சி எடுத்துக்கொள்வது நல்லது. அது பல உயிர்களைக் காப்பாற்ற உதவும்!