“மாரடைப்பே வந்துவிட்டது ; எங்களை ஏமாற்றிவிட்டார்” ரஜினி ரசிகர்கள் குமுறல்!

 

“மாரடைப்பே வந்துவிட்டது ; எங்களை ஏமாற்றிவிட்டார்” ரஜினி ரசிகர்கள்  குமுறல்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தது ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை பலராலும் இன்னும் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

“மாரடைப்பே வந்துவிட்டது ; எங்களை ஏமாற்றிவிட்டார்” ரஜினி ரசிகர்கள்  குமுறல்!

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற அறிவிப்பு அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் ரஜினி மக்கள் மன்ற ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி தாமோதரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்,
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் ரஜினி ரசிகனாக இருக்கிறேன் . அவர் அரசியலுக்கு வரவில்லை என்பது 8 கோடி பேரின் துரதிர்ஷ்டம். எப்படி சொல்லி புரிய வைப்பது எங்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. தலைவர் மீண்டும் அரசியல் களத்திற்கு வரவேண்டும் என்றார்.

“மாரடைப்பே வந்துவிட்டது ; எங்களை ஏமாற்றிவிட்டார்” ரஜினி ரசிகர்கள்  குமுறல்!

அதேபோல் ராமேஸ்வர துணை செயலாளர் சங்கிலிமுருகன் அளித்துள்ள பேட்டியில், “தலைவர் இப்படி அறிவிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை . 2017இல் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று அவர் சொன்னார். அப்போதிலிருந்தே நாங்கள் களம் இறங்கி வேலை செய்து வருகிறோம். பூத் கமிட்டி அமைத்தோம். ஆனால் தலைவர் தற்போது அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. அவர் வைத்திருந்த நல்ல திட்டங்கள் மக்களை வந்து சேராமலேயே போய்விட்டது. அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவர் அரசியலுக்கு வராதது கவலையாக தான் உள்ளது ஆனால் அதைவிட அவரது உடல்நலம் எங்களுக்கு முக்கியம்” என்று கூறியுள்ளார்.

“மாரடைப்பே வந்துவிட்டது ; எங்களை ஏமாற்றிவிட்டார்” ரஜினி ரசிகர்கள்  குமுறல்!

அதைப்போல் ரஜினி மக்கள் மன்ற நகர பொறுப்பாளர் குணசேகரன், ” இந்த முடிவு சரி இல்லை. அரசியலுக்கு வர முடிவு செய்துவிட்டு தற்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டார் . எனக்கு மாரடைப்பே வந்து விட்டது மாற்றம் வர வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். திராவிட கட்சிகளிடம் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும். ரஜினி முதல்வராக வேண்டும்” என்று கூறினார்.

“மாரடைப்பே வந்துவிட்டது ; எங்களை ஏமாற்றிவிட்டார்” ரஜினி ரசிகர்கள்  குமுறல்!

அதேபோல் ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் மாரி பிச்சை, “ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று சொன்னவுடன் நாங்கள் களமிறங்கி வேலை பார்த்தோம் தற்போது திடீரென்று வரவில்லை என்று கூறிவிட்டார். எங்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு. சின்ன சின்ன பசங்கள் எல்லாம் எங்களை கேலி பண்ணுகிறார்கள். அவரை நம்பி தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . ஆனால் அவர் எங்களை ஏமாற்றி அழ வைத்து விட்டு சென்றுவிட்டார் என்று குமுறலுடன் கூறியுள்ளார்.