“கடனை கேட்டார் -கழுத்தை அறுத்தார்”-பணம் கேட்ட பெண்ணை ஓடும் காரிலேயே பிணமாக்கிய டிரைவர்..

கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட ஒரு பெண்ணை ஓடும் காரிலேயே கொலை செய்த சம்பவம் கொல்கத்தாவின் முக்கிய சாலையில் அரங்கேறியுள்ளது .
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் டோலிகஞ்ச் பகுதியில் வசிக்கும் 40 வயது பெண் முதியாலியில் பணி புரிகிறார் .அவரிடம் ஒரு கால் டாக்ஸி டிரைவர் கடன் வாங்கியிருந்தார் .ஆனால் குறிப்பிட்ட தேதியில் அவர் வாங்கிய கடனை செலுத்தாமல் அந்த பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார் .

taxi
இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று அந்த ட்ரைவரின் காரில் அந்த பெண் வேலைக்கு சென்று கொண்டிருந்தார் .அப்போது அவர் அந்த ட்ரைவரிடம் கொடுத்த கடனை கேட்டுள்ளார் .அப்போது இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .அந்த சண்டையில் கோபமான அந்த ட்ரைவர் அந்த பெண்ணை ஓடும் காரிலேயே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் .பிறகு அந்த பெண்ணின் உடலை
ஈ.எம் பைபாஸிலிருந்து ஒதுங்கிய ஒரு இடத்திலுள்ள ஒரு கால்வாயில் வீசிவிட்டு சென்றுள்ளார் .
ஒரு பெண்ணின் அழுகிய உடல் கிடப்பதால் வந்த துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே ,விரைந்து வந்த போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .பிறகு இந்த கொலை பற்றி போலீசார் விசாரித்து ,அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் கொலை செய்த அந்த ட்ரைவரை கைது செய்து சிறையிலடைத்தனர் .

Most Popular

5 நாள் கடந்தும் கண் விழிக்காத பிரணாப்! – தீவிரமாக கண்காணித்து வருதாக மருத்துவமனை தகவல்

மூளையில் அறுவைசிகிச்சை முடிந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூளையில் ரத்தம் உறைந்ததால் ஏற்பட்ட...

கொரோனா சிகிச்சை வார்டில் கணினி ஆசிரியர்கள் பணியாற்ற உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பரிசோதனைகளை அதிகரிப்பது, நடமாடும் மருத்துவமனை, கொரோனா மருந்துகள் என பல்வேறு...

ஒலிம்பிக் போட்டியின் இந்தியா டீம் ஸ்பான்ஸர் இந்த நிறுவனம்தான்!

உலகமே கொண்டாடும் விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருந்து எண்ணற்ற திறமையாளர்கள் மைதானத்தில் நிறைந்து வழியும் அற்புதம் நிகழ்வதும்கூட. சென்ற ஒலிம்பிக் 2016 ஆம் ஆண்டு...

“தூக்கு போடுறத பாக்கு போடுற மாதிரி பண்ணும் சிறுவர்கள்” -இந்த பையன் தற்கொலை பண்ணிக்கிட்ட அற்ப காரணத்தை பாருங்க .

ஒரு சிறுவன் தன்னுடைய தாயார் விளையாட பூனைக்குட்டி வாங்கி தராததால் தூக்கு போட்டுக்கொண்ட சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் தந்தை வெளிநாட்டிலிருப்பதால் ஒரு தாயும் 15 வயது சிறுவனும்...
Do NOT follow this link or you will be banned from the site!