Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் ’தீட்டப்பட்ட அரிசியை விட கூடுதலாக 8 % கம்பு தானியத்தில் இரும்புச் சத்து இருக்கு’ டாக்டர் சிவராமன் தரும் ஹெல்தி டிப்ஸ்

’தீட்டப்பட்ட அரிசியை விட கூடுதலாக 8 % கம்பு தானியத்தில் இரும்புச் சத்து இருக்கு’ டாக்டர் சிவராமன் தரும் ஹெல்தி டிப்ஸ்

நம்முடைய உணவுமுறையே கடந்த 20 ஆண்டுகளாக மாறிவிட்டது. ஃபாஸ்ட் புட், ஜங் புட் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக நமது உணவு முறையில் கலந்துவிட்டது. அது நம் உடலின் ஆரோக்கியத்திற்கு எதிரானது.

குழந்தைகள் வளர்ப்போர் சரியான உணவுமுறைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், சிறுவயதில் ஆரோக்கியம் தரும் உணவுகளைக் கொடுத்து பழக்கப்படுத்தினால் வளர்ந்தாலும அதைத் தேடியே செல்வார்கள். உணவு என்பது பழக்கப்படுத்திக்கொள்வதுதானே.

நம்முடைய பாரம்பரிய உணவுமுறை என்பது சட்டென்று ஒரே நாளில் உருவானது அல்ல. பல்லாண்டுகளாக இதெல்லாம் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. அதனால் இவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். இதெல்லாம் சாப்பிட்டால் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அதனால், இவற்றையெல்லாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இப்படி பல ஆண்டுகால வாழ்க்கை முறையிலிருந்து உருவானதே பாரம்பரிய உணவு தயாரிப்பும், சமைக்கும் முறையும், சாப்பிடும் விதமும். ஆனால், பூச்சி மருந்து அடிக்கப்பட்ட நெல்லிருந்து அரிசி, காய்கறிகளைச் சாப்பிடத் தொடங்கியதும் நோய்கள் அதிகரித்துவிட்டன.

எனவே நம் உணவுமுறையில் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வது நல்லது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் டாக்டர் ஜி.சிவராமன் பேசிய முக்கியமான விஷயங்கள் உங்களுக்காக.

ஆரோக்கியமான சமுதாயத்துக்கு நாம் அனைவரும் பொறுப்பு. பாரம்பரிய உணவு பழக்க, வழக்கங்களுக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும்.  வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் முறைகள், பன்னெடுங்காலமாகப் பின்பற்றப்படுபவை. நமது பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவத்தில் உள்ள அறிவியல் குறித்து நாம் ஆழமாக புரிந்து கொள்வது அவசியம்.

baby feeding

கொவிட் தொற்று பரவலுக்குப் பின்பு, அனைத்து மருத்துவர்களும், துத்தநாகத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுகின்றனர். அந்தச் சத்து, அனைத்து வகையான கீரைகளிலும், தானியங்களிலும் அபரிமிதமாகக் கிடைக்கின்றன.  இத்தகைய தொற்றுக்களை எதிர்த்து போராடும் வகையில், நமது உடல் அதுதொடர்பான முறைகளை இயற்கையிலேயே, ஏற்றுக்கொள்ளக்கூடியது.  முதல் இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் அருந்திய குழந்தைகளிடத்தில் இது அதிகமாக இருக்கும்.  

இத்தகைய வாழ்வியல் முறை நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க, இந்த அணுக்க முறையை நாம் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். நொறுக்குத் தீனிகளை நாம் தவிர்ப்பது நல்லது’ என்றார்.

ராகி கஞ்சி பற்றி குறிப்பிட்ட மருத்துவர் ஜி.சிவராமன்,’ தவறான உணவு முறைகளைப் பின்பற்றுவதற்கு முன்பாக, நமது மரபணு பற்றி நன்கு புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தீட்டப்பட்ட அரிசியை விட கம்பு தானியத்தில், கூடுதலாக 8% இரும்பு சத்து உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்லது.

 இயற்கை விவசாய சிறுதானியங்களை உட்கொள்வதால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிப்பதற்கு மட்டுமல்லாமல், நமது விவசாயிகளுக்கும், மண் வளத்துக்கும், பல்லுயிர் பெருக்கத்துக்கும் இது அதிக அளவில் உதவும். தொற்று என்பது மனிதனின் சுயநலத்தின் பிரதிபலிப்பு என்று சமூக அக்கறையுடன் விரிவாகப் பேசினார் மருத்துவர்.

உணவே மருந்து என்பது நமது முதுமொழி. அது பெயரளவில் சொல்லப்பட்டது அல்ல. சரியான உணவுகளைச் சாப்பிட்டால் மருந்து எடுக்க வேண்டிய தேவையே இருக்காது. அதேபோல சில எளிதான நோய்களுக்கு மருந்தாக உணவுமுறையை மாற்றினாலே போதும் என்பதையும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எனவே, சிறுவயது முதலே ஆரோக்கியமான உணவுமுறைக்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்துவோம்.

Most Popular

யோகி மாநிலத்தில் கார் எந்த நேரத்திலும் கவிழும்…. ஹத்ராஸ் சம்பவம் குறித்து சூசகமாக சொன்ன பா.ஜ.க. மூத்த தலைவர்

ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வரும் வேளையில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை, யோகி மாநிலத்தில் கார் எந்த நேரத்திலும்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் சிவ சேனா…. மேல்முறையீடு செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்..

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக சிவ சேனா தெரிவித்துள்ளது. அதேசமயம் சிவ சேனாவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சி.பி.ஐ. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு...

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி

கர்நாடகாவில் நவம்வர் 3ம் தேதியன்று 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும்...

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச அரசு ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் குற்றம்சாட்டினார். உத்தர பிரதேசத்தில் முதல்வர்...
Do NOT follow this link or you will be banned from the site!