Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் ஆரோக்கியத்தைக் காக்க உதவும் ஐந்து உணவு பழக்கங்கள்!

ஆரோக்கியத்தைக் காக்க உதவும் ஐந்து உணவு பழக்கங்கள்!

ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை நாம் எடுத்துக்கொள்ளும் உணவு. உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை ஒரு நாள், சில நாள், பல நாட்கள் கூட தவறவிடலாம். ஆனால், உணவு அப்படி இல்லை. நம்முடைய உடலின் ஆரோக்கியத்துக்கு ஆதாரமே உணவுதான்.

ஒரு நாளைக்கு நம்முடைய உடல் இயங்க குறைந்தபட்சம் 2000 முதல் 2500 கலோரி வரை ஆற்றல் தேவை. ஆனால், பெரும்பாலானவர்கள் இந்த அளவைக் கடந்துதான் உணவை எடுத்துக்கொள்கின்றனர். ஆரோக்கிய வாழ்வுக்கான ஐந்து உணவு பழக்கங்கள் பற்றி இங்கே காண்போம்.

1. என்ன சாப்பிடுகிறோம் என்பதை கவனிக்க வேண்டும்.

நம் தட்டில் வைக்கப்படும் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்ற உணவு வகைகளில் என்ன என்ன சத்துக்கள் உள்ளன என்பதைப் பற்றி கவனிக்க வேண்டும். எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம், இதனால் எவ்வளவு கலோரி நமக்கு கிடைக்கும் என்பதை கணக்கு செய்து பார்க்க வேண்டும். அவை உடனடியாக செரிமானம் ஆகக் கூடியதா, நிதானமாக செரிமானம் ஆகி ரத்தத்தில் சர்க்கரையை கலக்கும் விதம் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல், அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்.

2. தண்ணீர்

நம்முடைய உடலுக்குத் தேவையான பெரும்பாலான தாதுஉப்புக்கள் தண்ணீர் இருந்தே பெறப்படுகின்றன. எனவே, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது ஊட்டச்சத்து உடல் முழுவதும் கொண்டு செல்ல உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவுகிறது. நச்சுக்கள் வெளியேறுவதால் சருமம் பொலிவு பெறும். உடல் உறுப்புக்கள் ஆரோக்கியமடையும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு, சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்தே அதிக அளவில் தண்ணீர் அருந்தலாம்.

3. பச்சைக் காய்கறி, கீரை

உணவில் பச்சைக் காய்கறி, கீரை அதிக அளவில் சேர்க்கும்போது உடல் ஆரோக்கியம் பெறும். வாரத்துக்கு இரண்டு, மூன்று நாளாவது கீரை எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதைக் காட்டிலும் சாலடாக எடுத்துக்கொள்வது நல்லது. கீரை வகைகளில் புரதம், இரும்பு, கால்சியம், நார்ச்சத்து உள்ளிட்டவை நிறைவாக உள்ளது.

4. மென்று உண்ண வேண்டும்…

உணவை அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம். நிதானமாக 30 முதல் 45 நிமிடங்கள் வரை பொறுமையாக மென்று சாப்பிட வேண்டும். பெரும்பாலானவர்கள் அவசர அவசரமாக உணவை நான்கு கடி கடித்துவிட்டு விழுங்கிவிடுகின்றனர். உணவு செரிமானப் பணி நம்முடைய வாயில் இருந்து தொடங்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நிதானமாக மென்று சாப்பிட்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

5. ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் சாஃப்ட் டிரிங்க்ஸ் தவிர்க்க வேண்டும்

நாம் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க… எதை எல்லாம் எடுக்கக் கூடாது என்பதிலும் கவனம் தேவை. சுவைக்காக மாதத்துக்கு ஒரு முறை சில உணவுகளை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. அதையே அன்றாட வாழ்க்கையாக மாற்றும்போதுதான் பிரச்னை வருகிறது. துரித உணவுகள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பது நல்லது. துரித உணவு, குளிர்பானங்களில் அள்ள அதிகப்படியான கலோரி உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துவிடும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்… டைம்ஸ்நவ் சிவோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு முடிவு

டைம்ஸ் நவ் சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்புகளுக்கும் தேர்தல் இறுதி முடிவுக்கும், வேறுபாடு இருக்காது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய என இரு கருத்துக்கணிப்புகளையும் அந்நிறுவனங்கள் வெளியிடும். கிட்டத்தட்ட அவற்றின் கருத்துக்கணிப்பின்படியே...

சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கும் சின்னம்மா பேரவை அமைப்பினர்!

அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயல‌லிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் அறிக்கை என சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “நான் என்றும் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ, ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின்...

மேற்கு வங்கத்தில் அடுத்த திருப்பம்.. பா.ஜ.க.வுக்கு தாவிய 5 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தனர். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் வரும்...

நான் மரு வச்ச துரைமுருகன்! நீதிமன்றத்தையே குழம்ப வைத்த திமுகவினர்!

.பழைய திரைப்படங்களில் மாறுவேடம் என்பதற்கு ஒரு சிறிய மருவை மட்டும் ஒட்டினால் போதும் என்பது போன்ற ஏமாற்று வேலைகளை பார்த்திருப்போம். அது போன்ற ஒரு சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்திருக்கிறது.
TopTamilNews