கொரோனா சந்தேகத்திற்குரிய நபரை நடுரோட்டில் விரட்டி பிடித்த போலீசார் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்: வைரல் வீடியோ!

கொரோனா சந்தேகத்திற்குரிய நபரை நடுரோட்டில் விரட்டி பிடித்த போலீசார் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்:  வைரல் வீடியோ!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா நகரில் நேற்று மதியம் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் மாஸ்க்கை முறையாக அணியாமல் கழுத்தில் மாட்டியப்படி பைக்கில் வந்துள்ளார். அவரை மடக்கிய போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது கடுப்பான அவர், ‘நான் ஒன்றும் கொரோனா நோயாளி அல்ல.

கொரோனா சந்தேகத்திற்குரிய நபரை நடுரோட்டில் விரட்டி பிடித்த போலீசார் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்:  வைரல் வீடியோ!

அதற்காக சவுதியில் பெற்ற சான்றிதழ் வீட்டில் வைத்திருக்கிறேன். எனக்கு முகக்கவசமே தேவையில்லை’ என்று கூறி சண்டையிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது போனிலிருந்து அவர் வீட்டுக்கு அழைத்து பேசிய போது, அவர் சவுதி அரேபியா, ரியாதில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்புதான் ஊர் திரும்பினார் என்றும் வீட்டிலேயே கோரண்டைனில் இருந்து வந்தார் எனவும் தனது மனைவியுடன் சண்டையிட்டு கோபத்தில் பைக்கில் வெளியே வந்ததும் தெரியவந்தது.

கொரோனா சந்தேகத்திற்குரிய நபரை நடுரோட்டில் விரட்டி பிடித்த போலீசார் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்:  வைரல் வீடியோ!

அதிர்ந்து போன போலீசார், சுகாதார ஊழியர்களை அழைக்க, சிறிது நேரத்தில் அங்கு ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால் அந்த நபரோ ஆம்புலன்ஸில் ஏற மறுத்து நடுரோட்டில் ஓட தொடங்கினார். ஆனால் அவரை விடாமல் துரத்திய போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி கை, கால்களை கட்டி ஸ்ட்ரக்சரில் தூக்கிப் போட்டு ஆம்புலன்சில் ஏற்றி சென்றனர்.

ஏற்கனவே கொரோனா கவச உடையுடன் ஆபத்தான காலக்கட்டத்தில் பணிபுரிந்து மருத்துவர்கள் , போலீசார், சுகாதாரப் பணியாளர்களுக்கு இதுபோன்ற சிலரால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.