மண்டை காய வைக்கும் நோய்களின் பெண்டை நிமிர்த்தும் சுண்டைக்காய் பொடி தயாரிக்கும் முறை

 

மண்டை காய வைக்கும் நோய்களின் பெண்டை நிமிர்த்தும் சுண்டைக்காய் பொடி தயாரிக்கும் முறை

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம்.

 கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது.

மண்டை காய வைக்கும் நோய்களின் பெண்டை நிமிர்த்தும் சுண்டைக்காய் பொடி தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்: சுண்டைக்காய், புளி, மோர், தயிர். சுண்டைக்காயை நசுக்கி தயிர் அல்லது புளி கரைசலில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைக்கவும். பின் 3 அல்லது 4 நாட்கள் தொடர்ந்து வெயிலில் காயவைத்து எடுப்பதால் சுண்டை வற்றலாக பல நாட்கள் கெடாமல் சேர்த்து வைக்கலாம். வற்றலை பொடி செய்து இருமலுக்கு மருந்தாகவும், வயிற்று வலி, உப்புசம் கோளாறுக்கு சிறந்த பானமாகவும் பயன்படுத்தலாம். வயிற்று கோளாறின் போது சுண்டை வற்றல் பொடியை, மோரில் உப்புடன் கலந்து குடிக்கலாம். அதேபோல் இருமல் வேளைகளில் சுண்டை வற்றல் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். நெஞ்சக சளியை வேர் அறுக்கும் சுண்டை வற்றலை தினமும் பயன்படுத்துதல் உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை தரவல்லதாய் இருக்கிறது. குடல் புழுக்களை அகற்றி செரிமானம் தொடர்பான பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. குறிப்பாக ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. வயிறு வீக்கம் காண்பது, வயிறு உப்புசம், வயிறு பொருமல், அஜீரண கோளாறுகளுக்கு சுண்டை வற்றல் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. பல சத்துக்களை உள்ளடக்கிய டானிக்காகவும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. சுண்டைக்காயை பயன்படுத்தி வயிற்று புழுக்களை அகற்றும் துவையல் செய்யலாம்.

சுண்டைக்காய் துவையல்: தேவையான பொருட்கள்: சுண்டைக்காய்(நசுக்கி தண்ணீரில் போட்டது), சின்ன வெங்காயம், நல்லெண்ணெய், புளி, வரமிளகாய், தேங்காய் துண்டு, பெருங்காயப்பொடி, உப்பு, சீரகம். வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், வரமிளகாய் சேர்க்கவும். இதனுடன் சுண்டைக்காய், தேங்காய் துண்டு சேர்த்து வதக்கவும். இந்த கலவையுடன் பெருங்காயப்பொடி, புளி, உப்பு சேர்த்து துவையலாக அரைத்து கொள்ளவும்.

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:
1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
2. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.
3. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
4. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.
5. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
6. சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.
7. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
8.தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.