எந்த நோய்க்கும் மாத்திரை சாப்பிடாமலிருக்க ,அரிசி சோறை எப்படி சாப்பிடணும் தெரியுமா ?

 

எந்த நோய்க்கும் மாத்திரை சாப்பிடாமலிருக்க ,அரிசி சோறை எப்படி சாப்பிடணும் தெரியுமா ?

அளவுக்கு அதிகமா அமிர்தம் சாப்பிட்டா கூட நோய் வரும்னு முன்னோர்கள் சொல்லி வச்சிருக்காங்க.  வெறும் அரிசிச் சோறு மட்டும் வட்டில் நிறைய போட்டு, வயிறுமுட்ட சாப்பிட்டு, அதுகேத்த உடல் உழைப்பு இல்லாம இருந்தா நிச்சயம் நோய் வரத்தான் செய்யும் . நாம சாதம் எவ்வளவு சாப்பிடுறோமோ அதுக்கு சமமா பலவகை காய்கறிகளையும் பழங்களையும் சேத்துக்கணும்! அப்போதான் அது முழுமையான உணவா அமையும்.

நம்ம அரிசி சாதத்துக்குனு நிறைய ஆரோக்கிய பலன்கள் இருக்குது. அதே நேரத்துல சோற எப்படி சாப்பிடக் கூடாதுன்னும் சொல்லியிருக்காங்க. அரைகுறை வேக்காட்டுல வெந்துருக்குற அரிசி சாதத்த சாப்பிடவே கூடாது! அதனால் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், சிறுநீர் வெளியேறுவதுல சிக்கல் வரும்.! அதே போல அதிகமான சூட்டோட இருக்குற சாதத்த சாப்பிடக் கூடாது.அப்படி சாப்பிட்டா குருதி அழல் (இரத்தத்தில் பித்தம் அதிகரிப்பது), அதிக தாகம், மயக்கம் உண்டாகும்; தொப்பை உண்டாகும்.

எந்த நோய்க்கும் மாத்திரை சாப்பிடாமலிருக்க ,அரிசி சோறை எப்படி சாப்பிடணும் தெரியுமா ?

மிதமான சூட்டுல, சீரா வெந்திருக்குற சாதத்த சாப்பிடணும். அப்படி சாப்பிடும்போது வாத, பித்த, கபம் ஆகிய பிரச்சனைகள் நீங்கி, வாய்ச்சுவை உண்டாகும்; உடலுக்கு நன்மை உண்டாகும்! சோறும் நெய்யும் கலந்து சாப்பிட்டா கண்ணுக்கு குளிர்ச்சி உண்டாவதோட நல்ல ஜீரணமும் நடக்கும்; பித்த நோய்களும் நீங்கும்.

பச்சரிசி சாதம் சாப்பிட்டா பித்தம் தணியும்; சிறுநீர் எரிச்சல் நீங்கும். குழந்தைகளுக்கு பச்சரிசி சாதம் மந்தம் உண்டாக்குவதால குடுக்கக்கூடாது!

அதேபோல நம்ம ஊர்ல பிரசித்தபெற்ற ஊற வச்ச பழைய சாதத்துல சிறப்பான மருத்துவ குணமிருக்கு.

 சாதத்த இரவு தண்ணியில ஊற வச்சு காலையில அத சாப்பிட்டா, உடல் சூடு தணியும்! அதோட ஆண்மை குறைவு நீங்கி ஆண்மை பெருகும். மேனி பொலிவு உண்டாகும்

அரிசி சாதம் டயட் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு வகை இப்படியாக இருக்கும்..

காலை உணவு மசித்த வாழைப்பழம் சேர்க்கப்பட்ட ஒரு கப் ஓட்ஸ் மற்றும் ஒரு ஆப்பிள் மதிய உணவு அரை கப் வேக வைத்த அரிசி சாதம், அரை கப் வேகவைத்த பீன்ஸ், கால் கப் உலர்ந்த திராட்சை இரவு உணவு அரை கப் கொழுப்பு அற்ற பால் மற்றும் அரை கப் கம்பு இரண்டாம் கட்டத்தில், ஒரு பொரித்த முட்டையை இணைத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு வாரத்தில் ஒரு முறை சால்மன் மீன் அரை துண்டு எடுத்துக் கொள்ளலாம். இத்துடன் ஸ்டார்ச், பழங்கள், காய்கறிகள் அதிகம் உள்ள உணவு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

நன்மைகள் :அரிசி டயட் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது, செரிமானத்தை சீராக்குகிறது, நச்சுத்தன்மையைக் குறைக்கிறது, எடை இழப்பு முயற்சிகளுக்கு உதவுகிறது,