எந்த விருந்துக்கு பிறகும், இதை கொஞ்சம் சாப்பிட்டா மருந்தே தேவையில்லை

 

எந்த விருந்துக்கு பிறகும், இதை கொஞ்சம் சாப்பிட்டா மருந்தே தேவையில்லை

பெருஞ்சீரகம் நம்  உடலுக்கு நன்மைகள் செய்யும் என்று நம் இயற்கை மருத்துவர்கள் இதை பல நோய்களை தடுக்க பயன்படுத்தியுள்ளனர்

எந்த விருந்துக்கு பிறகும், இதை கொஞ்சம் சாப்பிட்டா மருந்தே தேவையில்லை

1 டேபிள் ஸ்பூன்  பெருஞ்சசீரகத்தில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள்

கலோரிகள் – 19.8கிராம்

நார்ச்சத்துக்கள் – 2.3 கிராம்

கார்போஹைட்ரேட்டுகள்- 3 கிராம்

புரதம்- 0.9 கிராம்

கொழுப்பு 0.6 கிராம் உள்ளது .

நம்மில் பலருக்கு சாப்பிட்ட உடன் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிறு குழந்தைகளுக்கு வாயு தொல்லை, வயிறு உப்பிபோதல் போன்ற பிரச்சனைகளும் உருவாகிறது. இப்படியான சமயங்களில் பெருஞ்சீரகத்தை சிறிதளவு நீரில் போட்டு அதை நன்கு காய்ச்சி, சற்று இதமான சூட்டில் அந்நீரை  பருகினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

குளிர்காலங்களில் சிலருக்கு ஜலதோஷம் பீடித்து கொண்டு சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் வானிலை மாறுபடும் போது சுவாசிப்பதில் சற்று சிரமத்தை உணர்கின்றனர். தினமும் சிறிது பெருஞ்சீரகத்தை மென்று தின்று, சிறிது வெண்ணீரை அருந்தினால் மேற்கண்ட சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் உடனடியாக தீரும்.

சர்க்கரை வியாதி கொண்டவர்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ உணவுப்பொருளாக பெருஞ்சீரகம் இருப்பதாக பல மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெருஞ்சீரகங்களில் வைட்டமின் சி சக்தி அதிகம் உள்ளது. இது உடலின் ரத்த சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் இருக்கச் செய்வதில் பேருதவி புரிகிறது. எனவே நோயாளிகள் பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சாப்பிட்டு வருவது நல்லது.

உடலை பல வித நச்சுக்களின் பாதிப்பிலிருந்து நீக்கும் வேலையை நமது கல்லீரல் தொடர்ந்து செய்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிறிதளவு பெருஞ்சீரகங்களை சாப்பிட்டு வருவதால் கல்லீரல் பலம் பெரும்.

சிறிதளவு பெருஞ்சீரகத்தை வெறும் வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் பெண்களின் ஈஸ்டரோஜென் ஹார்மோன்கள் நன்கு தூண்டப்பெற்று மாதவிடாய் கால வலி மற்றும் இதர குறைபாடுகளை சரி செய்கிறது.மேலும் பெருஞ்சீரகம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது .