ஒரு ஆப்பிளுக்குள் ஒளிந்திருக்கும் ஓராயிரம் நன்மைகள்

 

ஒரு ஆப்பிளுக்குள் ஒளிந்திருக்கும் ஓராயிரம் நன்மைகள்

தற்போது அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய மிகவும் பிரபலமான மற்றும் பலரும் விரும்பி சாப்பிடும் பழம் தான் ஆப்பிள். ஆப்பிளில் பல வெரைட்டிகள் உள்ளன. அனைத்து வகையான ஆப்பிள்களும் ஒரே சத்துக்களைத் தான் கொண்டுள்ளது. ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. அந்த அளவில் ஆப்பிளில் ஏராளமான சக்தி வாய்ந்த உட்பொருட்கள் அடங்கியுள்ளன. அதில் ப்ளேவோனாய்டு, பாலிஃபீனால்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், பாஸ்பர், கால்சியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஒரு ஆப்பிளுக்குள் ஒளிந்திருக்கும் ஓராயிரம் நன்மைகள்

நீரிழிவு

இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது..

உடல் வலிமை

ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான க்யூயர்சிடின், உடலில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் செல்களின் வலிமை அதிகரித்து, நுரையீரலுக்கு சீரான இரத்த ஓட்டத்தை வழங்குகிறது.

பெருங்குடல் புற்றுநோய்

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்தானது, பெருங்குடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும்

நோய் எதிர்ப்பு சக்தி

ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது

கண்புரை

ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்

அழகாக சருமம்

ஆப்பிளில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இருப்பதால், அவை சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் தினமும் இதை சாப்பிட்டு வந்தால், அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல் அழிவைத் தடுத்து, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.

இதயம்

ஆப்பிள் மற்றும் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுவதால் இதய நோய் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

ஆரோக்கியமான பற்கள்

ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், வலுவிழந்து மற்றும் பொலிவிழந்து இருக்கும் பற்களை நன்கு பளிச்சென்று மின்ன வைப்பதோடு, ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.

ஆஸ்துமா

ஆப்பிளில் உள்ள பைட்டோ கெமிக்கல்களான ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் ஃபீனோலிக் ஆசிட்டுகள், மூச்சுக் குழாய்களில் இருக்கும் அடைப்புக்கள் அல்லது அழற்சியை நீக்கி, ஆஸ்துமா ஏற்படுவதை தடுக்கும்.

பார்கின்சன் நோய்

ஆப்பிளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், மூளையில் உள்ள டோபமைன் உருவாக்கும் மூளை செல்களை அழித்து உண்டாகும், பார்கின்சன் நோய் ஏற்படுவதை தடுக்கும்.

உயர் இரத்த அழுத்தம்

பொட்டாசியம் அதிகம் உள்ள ஆப்பிளில் உள்ளது. இந்த சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். எனவே இதனை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சாப்பிட்டால் நல்லது.

எடை குறைவு

ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பெக்டின் அதிகம் உள்ளதால், அவை உடலை கட்டழகுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் உள்ள பாலிஃபீனால், உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே எடை குறைய விரும்புவோர், ஆப்பிளை தினமும் சாப்பிடுவது சிறந்தது.

புற்றுநோய்

ஆப்பிளில் உள்ள ஃப்ளேவோனாய்டுகளான க்யூயர்சிடின், நுரையீரல், மார்பகம் மற்றும் குடல் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

வலுவான எலும்புகள்

ஆய்வுகளில் ஆப்பிளில் உள்ள ஃப்ளேவோனாய்டான ஃப்ளோரிட்ஜின் இருப்பதால், அவை இறுதி மாதவிடாய்க்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் எலும்புப்புரை ஏற்படுவதை தடுத்து, எலும்புகளை வலுவடையச் செய்யும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே பெண்கள் ஆப்பிளை அதிகம் சாப்பிட வேண்டும்.

மூளை

ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.

பித்தக்கற்கள்

ஆப்பிளில் இயற்கையாகவே மாலிக் ஆசிட் மற்றும் இதர மென்மைப்படுத்தும் பொருட்கள் அதிகம் இருப்பதால், இவை பித்தப்பையில் பித்தக்கற்கள் உண்டாவதை தடுக்கும

குடலியக்க எரிச்சல்

அதிக நார்ச்சத்து ஆப்பிளில் இருப்பதால், இவை குடலியக்கத்தின் போது ஏற்படும் எரிச்சலைத் தடுக்கும்

இரத்த சோகை

தினமும் இரண்டு முதல் மூன்று ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அனீமியா என்னும் இரத்த சோகையை சரிசெய்துவிடலாம். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.

ஆப்பிளை எப்போது சாப்பிடுவது சிறந்தது. ஆப்பிளை எப்போது சாப்பிட்டாலும், அதன் நன்மைகள் கிடைக்கும். பொதுவாக இரவில் தூங்கும் முன்பு எதையேனும் சாப்பிட்டால், அது தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தி, நாள் முழுவதும் விழித்திருக்க செய்துவிடும். இம்மாதிரியான நிலைமை காரமான, கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டால் தான். அப்படியெனில் ஆப்பிளை சாப்பிடுவது நல்லதா என்றால், நிச்சயம் ஆப்பிள் இரவு நேரத்தில் சாப்பிட ஏற்ற ஒரு அற்புதமான உணவுப் பொருள்.