சர்க்கரை நோயாளிகள் , கண் பார்வையில் அக்கறையா இருக்க சில டிப்ஸ்

 

சர்க்கரை நோயாளிகள் , கண் பார்வையில் அக்கறையா இருக்க சில டிப்ஸ்

டைப்-1ன் வகையை சேர்ந்த சர்க்கரை நோயாளிகளுக்கு 15 ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருந்தால் அவர்களது கண்பார்வை 100 சதவீதம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

சர்க்கரை நோயாளிகள் , கண் பார்வையில் அக்கறையா இருக்க சில டிப்ஸ்

டைப்-2 வகையினருக்கு நீரிழிவு நோய் 15 ஆண்டுகள் நீடித்தால் 30 சதவீதம் பேரின் கண்பார்வை கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்தால், இந்நோயாளிகள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதிலும் விழித்திரை நிபுணரிடம் (ரெட்டினா ஸ்பெஷலிஸ்ட்) சென்று `செக்-அப்’ செய்வது மிகவும் நல்லது.

பரிசோதனை

எப்.எப்.ஏ.  என்ற கண் பரிசோதனை மூலம் நீரிழிவால் ஏற்படும் ரத்த நாள கோளாறுகளை கண்டறிய முடியும். இப்பரிசோதனைக்கு பிறகு கண்ணுக்குள் இன்ட்ரா விட்ரியாஸ் என்ற  மருந்தை ஊசி மூலம் செலுத்துவோம்.

கண்ணுக்குள் வி.இ.ஜி.எப். ரசாயனம் உண்டு. இந்த ரசாயனத்துக்கு எதிராக வி.இ.ஜி.எப். மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் ரத்தநாள கோளாறு குணமாகும். இதில் கையின் ரத்தநாளங்களில் மருந்தை செலுத்தி விழித்திரையில் லேசர் செய்ய வேண்டிய இடங்களை கண்டறியலாம். பரிசோதனை மூலம் லேசர் கிரணங்களை உள்ளே செலுத்தி கண்களில் கத்தி வைக்காமல், விழித்திரையின் சிகிச்சை  செய்ய முடியும்.

சிகிச்சைகள்

நீரிழிவு நோய் காரணமாக கண்களில் இருந்து நீர் கசிந்தால் லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

சில நேரங்களில் ஸ்டீராய்டு ஊசி உதவக்கூடும்.

மற்றொரு சிகிச்சையானது விட்ரெக்டோமி என்ற அறுவை சிகிச்சை ஆகும். இது பொதுவாக இரத்தப்போக்கு காரணமாக செய்யப்படுகிறது .,

உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்

உங்கள் பார்வை  நிலை மோசமடைவதைத் தடுக்க நீங்கள் முனேச்சரிக்கையாக இருக்க வேண்டும் . முதலில், உங்கள்  சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை  கட்டுப்படுத்துங்கள் .

உணவு கட்டுப்பாடு , ஆரோக்கியமான எடையை வைத்திருத்தல் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை இந்த சிக்கல்களை நிர்வகிக்க உதவும். இதைச் செய்வதற்கான சிறந்த வழி பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

மேலும், வழக்கமான கண் பரிசோதனைகளைத் தவிர்க்க வேண்டாம். அறிகுறிகள் வெளியே தெரியாமலிருக்கலாம் . உங்கள் சிகிச்சையை  கண்காணிக்க உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசோதிக்க வேண்டும்.