தூக்கமில்லாம தவிக்கிறவங்க, இதை படிச்சா தூக்க மாத்திரை போட்டா மாதிரி தூங்கலாம்

 

தூக்கமில்லாம தவிக்கிறவங்க, இதை படிச்சா தூக்க மாத்திரை போட்டா மாதிரி தூங்கலாம்

இன்று இருக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில் பலருக்கு வேலை நேரம் அடிக்கடி மாறுவதால் தூக்கமின்றி தவிக்கிறார்கள் .இந்த தூக்கமின்மையை சமாளிக்க பல டிப்ஸ் கொடுக்கிறோம் .

தூக்கமில்லாம தவிக்கிறவங்க, இதை படிச்சா தூக்க மாத்திரை போட்டா மாதிரி தூங்கலாம்

தூங்கச் செல்வதுக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் டீ, காபி, மது போன்றவற்றை அருந்தக் கூடாது. காபியில் உள்ள கஃபைன் புத்துணர்ச்சி கொடுப்பதால் , தூக்கத்தைக் கெடுத்துவிடும். ஆக, கஃபைன் நிறைந்த காபி, டீயை மாலை 5 மணிக்கு மேல் பருகாதீர்கள்.

மேலும் தூங்கச் செல்வதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும். இரவில் எளிதில் செரிமானமாகும் உணவுகளையே சாப்பிட வேண்டும்.  தயிர், முட்டை, இறைச்சி, எண்ணெயில் பொரித்த சிப்ஸ், ஃபாஸ்ட் ஃபுட், காரமான உணவுகளுக்கு கறாராக `நோ’ சொல்லிவிடுவது பெஸ்ட்.

தூக்கத்தை ஊக்குவிக்கும் தன்மை பாலுக்கும் இருக்கிறது. வெறுமனே பாலை பருகாமல் அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமப்பூ கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம்.

படுக்கையறையைத் தூங்குவதுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். படுக்கையில் உட்கார்ந்து ஆபிஸ் வேலைகளைச் செய்வதோ,  டி.வி., கம்ப்யூட்டர், லேப்டாப் பார்ப்பதோ கூடவே கூடாது. இரவில், படுத்தவாறே குறைந்த வெளிச்சத்தில் மொபைல் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.

இரவு குறைவாக சாப்பிடுவதே நல்லது. ஓட்ஸ் உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆழ்ந்த தூக்கத்தையும் தூண்டும். அதில் மன அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் பி6 சத்தும் நிறைந் திருக்கிறது. அதிலிருக்கும் அபிஜெனின் எனும் ஆன்டிஆக்சிடெண்டு மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டி ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்திவிடும்.

மேலும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு பத்து நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் நல்ல தூக்கம் வரும் .