சைட் எபெக்ட் இல்லாமல் சைனஸ் பிரச்சினையை மைனஸ் பண்ண சித்தர்கள் காட்டிய வழி

 

சைட் எபெக்ட் இல்லாமல் சைனஸ் பிரச்சினையை மைனஸ் பண்ண சித்தர்கள் காட்டிய வழி

சைனஸ் வலி எவ்வளவு தொந்தரவாக இருக்கும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். தூசி, ஒவ்வாமை, ரசாயனங்கள் அல்லது எரிச்சலூட்டும் பொருட்கள் காரணமாக சைனஸ் தொற்று ஏற்படுகிறது. சைனஸ் பிரச்சனை நோய் இரண்டு வகைப்படும். ஒன்று அக்யூட் ரியோ சைனஸைட்டீஸ் என்றழைக்கப்படுகிறது. இவை குறுகிய காலம் மட்டுமே இருக்கும். மற்றொன்று க்ரானிக் ரியோ சைனஸைட்டீஸ் என்றழைக்கப்படுகிறது. இது நீண்ட கால சைனஸ் ஆகும்.

சைட் எபெக்ட் இல்லாமல் சைனஸ் பிரச்சினையை மைனஸ் பண்ண சித்தர்கள் காட்டிய வழி

ஒவ்வாமையால் அவதிப்படும் சிலருக்கு சளிப் பிரச்னை குறையாமல் இருக்கலாம். அவர்கள் எதற்கு ஒவ்வாமையுடன் இருக்கிறார்களோ, அதில் இருந்து சில நாட்கள் விலகி இருந்து மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவர, சளிப் பிரச்சனை விலகிவிடும்.

மிளகு, மஞ்சள், தேன்

சளிப் பிரச்சனையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள 10 முதல் 12 முழு மிளகு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை உடைத்துக்கொள்ள வேண்டும், பவுடராக்கக் கூடாது. அதை 2 ஸ்பூன் தேனில் ஓர் இரவு அல்லது எட்டரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். காலையில் அதை எடுத்து மென்று தின்றால் சளி கரைந்துவிடும். இத்துடன் கபாலபாதி பயிற்சியும் செய்து வர, சளிப் பிரச்சனையில் இருந்து எளிதாக வெளிவர முடியும்.

அல்லது மஞ்சளை இரண்டு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடலாம். அல்லது மிளகு, மஞ்சள் மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து சாப்பிடலாம். அனைத்துப் பால் பொருட்களையும் விட்டாலே சளி மிகவும் குறைந்துவிடும்.

சைனஸ் பிரச்னை வராமல் எப்படித் தடுப்பது?

சளி மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி)யால் ஏற்படும் மூக்கடைப்பு தொடர்ந்து இருக்குமானால் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.

மதுப் பழக்கம், புகைப் பழக்கத்தைக் கைவிடவும். இது மூக்கில் உள்ள மெல்லிய சவ்வுகளைப் பாதித்து, வீங்கச் செய்யும்.

ஒவ்வாமை இருக்குமானால், எதனால் ஏற்படுகிறது என்று கவனிக்கவும்.கபம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால், கபத்தை முழுமையாக அகற்றலாம். மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்போது, கபத்தை எரிக்க முடிவதை உணர முடியும்.

எந்தவித அலர்ஜியாக இருந்தாலும், தோல் அலர்ஜி என்று மட்டுமல்ல, வேப்பிலையை உருண்டை செய்து தேனில் நனைத்து முழுங்கிவர ஒவ்வாமை சரியாகும்.

தினமும் தேன் சாப்பிடுவது சளி தொடர்பான பிரச்சனைகளுக்கு மிகவும் உதவி செய்யும்.

மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் வீட்டுக் கைமருத்துவத்தைப் பார்க்கலாம்.

1. எஸன்ஷியல் எண்ணெய்கள்:
தேவையானவை:
– 3-4 துளிகள் நீலகிரி தைலம்
– 3-4 துளிகள் லாவெண்டர் எண்ணெய்
– 3-4 துளிகள் எழுமிச்சை எண்ணெய்
அனைத்து எண்ணெய்களையும் கலந்து உங்கள் விரல்நுனிகளில் தடவுங்கள்
உங்கள் கழுத்து, நெற்றி மற்றும் கழுத்தின் பின்னால் தடவுங்கள்
இதை தினமும் சுவசிக்கும் போது மூக்கில் ஏற்பட்ட அடைப்புகள் நீங்கும்.

2. ஆப்பிள் சைடர் வினிகர்:
இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை 6 அவுன்ஸ் குடிநீரில் கலந்து குடிக்கவும். இதை கொண்டு நீங்கள் கொப்புளிக்கவும் செய்யலாம். இது உங்கள் உடம்பில் உள்ள அமிலத்தன்மையை குறைத்து, உடலை சீர்ப்படுத்தும்.