டயாலிசிஸ்க்கு போகாமல் கிட்னியை காலம் முழுவதும் காப்பாற்றும் டயட்

 

டயாலிசிஸ்க்கு போகாமல் கிட்னியை காலம் முழுவதும் காப்பாற்றும் டயட்

உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கவும் ,இந்த கோடை காலத்தில் பல சிறுநீரக நோய்களிலிருந்து காப்பாற்றவும் சில உணவு முறைகளை கூறுகிறோம் .

டயாலிசிஸ்க்கு போகாமல் கிட்னியை காலம் முழுவதும் காப்பாற்றும் டயட்

பூண்டின் நன்மைகளை சொல்லவே தேவை இல்லை தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வருவதை தவிர்ப்பதோடு, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும். இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக நடக்கும். முக்கியமாக, சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் சிறுநீரகக் குழாய்களில் ஏற்படும் தொற்று போன்றவற்றிற்கு பெரிதும் துணை புரிகிறது. எனவே, தினமும் ஒரு பல் பூண்டு பச்சையாகவே சாப்பிடுவது நல்லது .

திராட்சையில் வைட்டமின் சி நிறைய  உள்ளது . இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் .ரத்த ஓட்டத்தை சீர்படுத்த உதவும். மேலும், ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு தேவையான முக்கியமான கூறுகளில் இதுவும் ஒன்றாகும். அதேபோன்று திராட்சை சாப்பிடுவதால் அதிகப்படியான கொழுப்பை குறைத்து மாரடைப்பை தடுப்பது, சிறுநீரகத்தில் கல்  (kidney stone) ஏற்படுவதை தடுக்கிறது.

முட்டைகோஸ் ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு சிறந்த உணவுகளில் முட்டை கோசு ஒன்று. அதிலுள்ள வளமையான ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல் பிற உறுப்புகளுக்கும் நன்மையை ஏற்படுத்தும். புற்றுநோய் அணுக்களை எதிர்த்து போராட உதவும் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் இதில் வளமையாக உள்ளது. அது மட்டுமல்லாமல், முட்டைக்கோஸில் வைட்டமின் k , போலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு  இது ஒரு சக்தி வாய்ந்த உணவாக திகழ்கிறது .

நீர்ச்சத்து அதிகமான உணவு கோடைக்காலத்தில் அதிகமாக வியர்வை வெளியேறும். உடலில் போதுமான நீர் இல்லாவிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகிறதற்கான வாய்ப்பு ஏற்படும். முதியவர்கள் மற்றும் சிறுபிள்ளைகளுக்கு போதிய நீர்ச்சத்து இல்லாவிட்டால் சிறுநீரகத்தில் காயம் ஏற்படலாம். ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 12 தம்ளர் நீர் பருகுவது அவசியம். மேலும் நீர்ச்சத்து அதிகமான வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றை சாப்பிடுவதும் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை அளிக்கும். குறைவான உப்பு அளவுக்கு அதிகமான உப்பை நாம் சேர்த்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதிக்கும். சாதாரணமாக தினமும் 7 முதல் 10 கிராம் உப்பு சேர்க்கிறோம். அதை 4 முதல் 5 கிராம் என்ற அளவுக்கு குறைத்துக்கொள்வது நலம்.