இந்த உணவுகளை தொடாதீங்க ,இருக்கிற தலை முடியையும் விடாதீங்க

 

இந்த உணவுகளை தொடாதீங்க ,இருக்கிற தலை முடியையும் விடாதீங்க

அனைத்து உணவுகளும் உடலுக்கு தேவை என்றாலும், ஒரு சில உணவுகளை தலை முடி கொட்டாமலிருக்க தவிர்ப்பது நல்லது. அப்படி நீங்கள் நல்ல தலைமுடி வளர்ச்சியை எதிர் பார்த்தால், அதற்கு தவிர்க்க வேண்டிய உணவுகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்

இந்த உணவுகளை தொடாதீங்க ,இருக்கிற தலை முடியையும் விடாதீங்க

 சர்க்கரை

நாட்டு சர்க்கரை போல இல்லாமல், வெள்ளை சர்க்கரை பல ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றது. இதனால் உடலில் புதிதாக பல நோய்கள் உண்டாகின்றது. குறிப்பாக நீரழிவு நோய், இரத்த கொதிப்பு மற்றும் இருதய நோய் அதிக அளவு ஏற்படுகின்றது. இந்த வகையில், வெள்ளை சர்க்கரை தலைமுடியின் வளர்ச்சியையும் பெரிதும் பதிகின்றது. வெள்ளை சர்க்கரை சேர்க்கப்பட்ட அனைத்து உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

​வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ சத்து உடலுக்கு கண்டிப்பாக தேவை. இவை அன்னாசி, பப்பாளி, கொய்யா, மாம்பழம், பரங்கிக்காய், நெல்லிக்காய் கேரட், பொன்னாங்கண்ணி, கீரை போன்றவற்றில் அதிகமாகவே இருக்கிறது. இந்த வைட்டமின் சத்து குறைபாடு நேர்ந்தால் கண் தொடர்பான பாதிப்புகள் உண்டாககூடும். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போன்று இவை அதிகரித்தால் உடலில் நச்சுத்தன்மை உண்டாகக்கூடும். வைட்டமின் ஏ அதிகரிக்கும் போது தலைமுடியின் வளர்ச்சியை பாதிக்க செய்யும்.

​கேடு நிறைந்த உணவுகள்

பெரும்பாலும் உடலுக்கு கேடு தரும் உணவுகள் என்றால் அது துரித உணவுகள் தான். இவை நாக்குக்கு மட்டுமே சுவைதரக்கூடியவை. உடலுக்கு இயன்ற அளவு தீங்கு மட்டுமே தரும்.கொழுப்பு நிறைந்த எண்ணெயில் பொறித்த உணவுகள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு தலை முடி வளர்ச்சியையும் பாதிக்க செய்யும். பொறித்த உணவுகள் உடலுக்கு மட்டும் அல்லாமல் தலைமுடிக்கும் சேதத்தை உண்டாக்கும்.

அதே போன்று செயற்கை உணவுகளில் கலந்திருக்கும் இரசாயனங்கள், செயற்கை சுவையூட்டிகள் போன்றவை எல்லாமே கேடுதரகூடியவையே. அதனால் முடி  ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் இதையெல்லாம் தவிர்ப்பதே நல்லது.

பதப்படுத்தப்பட்ட அதிக சர்க்கரை சேர்த்த பேக்கரி உணவுகள், பிஸ்கட், ரொட்டி வகையறாக்களும் உடலில் இருக்கும் நார்ச்சத்தோடு கூந்தல் வளர்ச்சியிலும் அதிக பாதிப்பை உண்டாக்கும்.

​கார்பனேட்டட் மற்றும் மது பானங்கள்

சோடா மற்றும் செயற்கை குளிர்பானங்கள் தற்காலிகமாக நாவுக்கு சுவை தரக்கூடியவை. இவை உடலில் சத்துக்களாக செயல்படுவதில்லை. உடல் ஆரோக்கிய குறைபாட்டையே உண்டாக்கும். அது போலவே இவை தலைமுடி வளர்ச்சியையும் அதிகமாக பாதிக்கும். ஆல்கஹால் பானங்களும் தலை முடி வளர்ச்சிக்கு கேடு தரக்கூடியவையே

துரித உணவு

துரித உணவுகளில் சரியான மற்றும் போதிய சத்துக்கள் இருக்காது. அவை சுவையாக இருப்பது போல இருந்தாலும், உடலுக்கு பல தீங்குகளை தரும். அதனால், முடிந்த வரை துரித உணவை தவிர்ப்பது நல்லது.

பொறித்த உணவு

இதில் அதிக அளவு எண்ணை மற்றும் கொழுப்பு நிறைந்திருக்கும். அவை அதிக அளவு உடலில் சாரும் போது, பல எதிர்மறை பலன்களை தரக் கூடும். இதன் காரணமாகவே தலைமுடியின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். அதனால் பொறித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.

கஞ்சி நிறைந்த வெள்ளை உணவுகள்

இத்தகைய உணவுகள் உடலுக்கு அதிக பாதிப்புகளை உண்டாக்கக் கூடும். இவற்றை தொடர்ந்து தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் நலன் பாதிப்பதோடு, தலைமுடியின் வளர்ச்சியும் பாதிக்கக் கூடும்.

 செலெனியம்

இது தலைமுடி உதிர்வை அதிகரிக்கும். இதன் அளவு சிப்பி, கோதுமை ரொட்டி, மற்றும் சில குறிப்பிட்ட மீன் வகையில் உள்ளது. இத்தகைய உணவுகளை அதிகம் தவிர்ப்பது நல்லது.