வாட்டி எடுக்கும் வறட்டு இருமலை விரட்டியடிக்கும் முரட்டு வைத்தியம்

 

வாட்டி எடுக்கும் வறட்டு இருமலை விரட்டியடிக்கும் முரட்டு வைத்தியம்

ஒவ்வொரு முறை தூசிகள் நுரையீரல், தொண்டை அல்லது சுவாச பாதையில் நுழையும் போது, உடல் அதை இருமலின் மூலம் வெளிக்காட்டும். வறட்டு இருமலும் அப்படித் தான். சிலருக்கு இரவு நேரத்தில் மட்டும் இருமல் வரும். அதுவும் நன்கு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல் இருமல் கடுமையாக வரும்.

வறட்டு இருமலுக்கு என்று மருந்து மாத்திரைகள் எதுவும் எடுக்காதீர்கள். இத்தகைய பிரச்சனைக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண்பதே சிறந்தது.

வறட்டு இருமல் எதனால் வருகிறது? *

சுவாசப் பாதையில் உள்ள தொற்றுகள் இருந்தால் வரும். * சைனஸ் பிரச்சனை இருந்தால் வரும். * நிமோனியா * தூசி அல்லது மகரந்தத்திற்கு அலர்ஜி என்றால் வரும்.

வாட்டி எடுக்கும் வறட்டு இருமலை விரட்டியடிக்கும் முரட்டு வைத்தியம்

அதிமதுரத்த பொடி செஞ்சு 1-2 கிராம் அளவு எடுத்து தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா சளி குணமாகும்…. அதிமதுரம், கடுக்காய், மிளகு இந்த மூனையும் சம அளவு எடுத்து, இளம் வறுப்பா வறுத்து, பொடி செஞ்சு 2-4 கிராம் அளவு தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா, சூட்டுனால வர்ற இருமல் குணமாகும். அதுமதுரத் துண்டு ஒன்னு எடுத்து, ச்சும்மா வாயில போட்டு சுவைச்சு விழுங்கிட்டா கூட வறட்டு இருமல் குணமாகும்.

உடல் உஷ்ணம்:

அது மட்டுமில்ல, உடல் சூடு பிரச்சனை உள்ளவங்க ஒரு 17 கிராம் அதுமதுரம் எடுத்து வெந்நீர் விட்டு கலக்கி, பிறகு வடிகட்டி தினமும் ரெண்டு வேள குடிச்சா உடல் உஷ்ணம் தணியும்!

அக்குள் நாற்றம், சொறி, சிரங்கு:

 இந்த அதிமதுர இலைய அரைச்சு உடம்புல பூசி குளிச்சு வந்தா, அக்குள்ல ஏற்படுற கற்றாழை நாற்றம் இருக்காது. சொறி சிரங்கு கூட இதனால சரியாகும்!”.

குறிப்பு:

சுளுக்கு பிடிப்பு உள்ள இடங்களில் முதலில் சிற்றாமணக்கு எண்ணெயை தடவி, பின் அதிமதுர இலையை பற்று வைத்தால், அவ்விடத்தில் ஒருவித விறுவிறுப்பு உண்டாகி வலி நீங்கும்.

எந்த ஒரு மூலிகையையும் உட்பிரயோகமாக உபயோகிக்கும் முன் முறைப்படி மருத்துவ ஆலோசனை பெறுதல் அவசியம்!

அதிமதுரம் டீ!

தேவையான பொருட்கள்

அதிமதுரம் தூள் – 1 ஸ்பூன்

தண்ணீர் – 200 மில்லி

தேன் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி – சுவைக்கேற்ப

செய்முறை

அதிமதுரம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி நிழலில் காய வைத்து, சுத்தம் செய்து பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். பொடியை நீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து வடிகட்டி பருகவும். இது தீராத தாகத்தை தணிக்கவல்லது, சளிக்கு நல்லது. தொண்டை புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது.