கம்ப்யூட்டரிலேயே இருக்கிங்களா ? “ரோஜா குல்கந்து” சாப்பிட்டு ராஜா போல வாழுங்க !

 

கம்ப்யூட்டரிலேயே இருக்கிங்களா ? “ரோஜா குல்கந்து” சாப்பிட்டு ராஜா போல வாழுங்க !

ரோஜா குல்கந்து ஆண்மை பெருக்கி என்றும் அழைக்கப்படுகிறது.ஆண்களின் உடலுக்கு வலிமை கிடைக்க இவை உதவுகிறது. இன்று கணினியில் பணி புரியும் ஆண்கள் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் போது விந்தணுக்கள் எண்ணிக்கை வீரியம் குறையக்கூடும். உணவு முறை, வாழ்க்கை முறை மோசமாக கடைபிடிக்கும் ஆண்களுக்கு இது மலட்டுத்தன்மையை உண்டாக்கவும் வாய்ப்புண்டு.

கம்ப்யூட்டரிலேயே இருக்கிங்களா ? “ரோஜா குல்கந்து” சாப்பிட்டு ராஜா போல வாழுங்க !

ஆனால் இந்த குறைபாடு உண்டாவதற்கு முன்பே இரவில் பாலில் குல்கந்து கலக்கி கொடுத்தால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்கும் . வீரியம் அதிகமாக இருக்கும். ஆண்மை குறைபாடு உண்டாகாது. பெண்களுக்கு வெள்ளைப்படுதல், மாதவிடாய் கால வயிறு வலி போன்ற உபாதைகளை குறைக்கவும் இது உதவுகிறது.

துவர்ப்பு சுவை கொண்டுள்ளதால் ரோஜா குல்கந்து ரத்த குழாய்களுக்கும் இதயத்துக்கும் கல்லீரலுக்கும் நன்மை செய்யும். இது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.மன அழுத்தம் போக்கும் மருந்தாகவும் இவை செயல்படுகிறது.

இரவில் தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில் ஒரு டீஸ்பூன் அளவு ரோஜா குல்கந்து கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும். ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் இது சருமத்தில் சுருக்கங்களை அண்டவிடாமல் சரும பளபளப்பை அதிகரிக்கும்.

ரோஜா குல்கந்து தயாரிக்கும் முறை :
தேவையானவை

ரோஜா பூ – 30 பூக்கள் ( நாட்டு பூ பன்னீர் பூவாக இருக்க வேண்டும்)

பெரிய கற்கண்டு – 100 கிராம்

தேன் – 100 கிராம்

குங்குமப்பூ – 5 கிராம்

வெள்ளரி விதை-10 கிராம்

கசகசா -10 கிராம்

நுரையீரல் சளி, கோழை, சைனஸ், ஆஸ்துமா அனைத்தும் அகற்றும் ஒரு மூலிகை, எப்படி பயன்படுத்துவது!

செய்முறை

ரோஜாபூ பூச்சிகொல்லி அடிக்காத மலராக இருக்க வேண்டும். அந்த பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து நீரில் அலசி எடுக்கவும். நீர் உலரும் வரை வைத்திருந்து கற்கண்டையும், ரோஜா இதழ்களையும் உரலில் இட்டு இடிக்கவும். சிலர் மிக்ஸியில் இட்டு மைய அரைப்பார்கள். ஆனால் உரலில் இட்டு இடிப்பதுதான் நல்லது. இவை நன்றாக கலந்ததும் எஞ்சியிருக்கும் பொருள்களான வெள்ளரிவிதை கசகசா சேர்த்து ஒரு இடி இடித்து சுத்தமான கண்ணாடி பாட்டிலில் வழித்து எடுக்கவும்.

கம்ப்யூட்டரிலேயே இருக்கிங்களா ? “ரோஜா குல்கந்து” சாப்பிட்டு ராஜா போல வாழுங்க !

முதலில் சிறிது தேன் பிறகு இடித்த விழுது சேர்த்து பிறகு குங்குமப்பூ சேர்க்கவும். இதே போன்று தேன், இடித்த விழுது, குங்குமப்பூ மாறி மாறி சேர்த்து நன்றாக கலந்தால் எல்லா பொருள்களும் நன்றாக கலந்துவிடும். இதன் வாயிலில் துணி கட்டி அப்படியே வெயிலில் வைத்து நன்றாக கிளறி விடவும். தொடர்ந்து 5 நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுக்கலாம். ரோஜா குல்கந்து தயார். இதை பீங்கான் பாட்டிலில் எடுத்துவையுங்கள்.