“திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி விரைவில் செயல்பாட்டுக்கு வரும்” – ராதாகிருஷ்ணன்

 

“திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி விரைவில் செயல்பாட்டுக்கு வரும்” – ராதாகிருஷ்ணன்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகி வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கட்டுமான பணிகள் அடுத்த கல்வியாண்டிற்குள் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை இன்று ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை நாள்தோறும் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வந்த நிலையில், தற்போது 2 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், கொரோனா உயிரிழப்பு மற்றும் நோய் பரவல் விகிதமும் தற்போது குறைத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி விரைவில் செயல்பாட்டுக்கு வரும்” – ராதாகிருஷ்ணன்

திருவள்ளூர் மாவட்டத்தில் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை பணிகள், அடுத்த கல்வியாண்டிற்குள் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துமனையிலேயே அனைத்து சிறப்பு மருத்துவர்களும், அதற்கான உபகரணங்களும் செயல்பட துவங்குவதால், மேல் சிகிச்சைக்காக இனி சென்னைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.