கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்… பயப்பட வேண்டாம் – சுகாதாரத்துறை செயலர் பேட்டி!

 

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்… பயப்பட வேண்டாம் – சுகாதாரத்துறை செயலர் பேட்டி!

கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் பற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் அதிகளவு பரவும் மாநிலமாக கேரளா உள்ளது. தினசரி 30 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழலில், தற்போது நிபா வைரஸ் மீண்டும் பரவுவது மக்களை அச்சமடையச் செய்துள்ளது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 12 வயது சிறுவன் இன்று காலை உயிரிழந்தது சுகாதாரத்துறையினரையே அதிர வைத்துள்ளது. இந்த நிலையில், கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் பற்றி பதற்றமடைய தேவை இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்… பயப்பட வேண்டாம் – சுகாதாரத்துறை செயலர் பேட்டி!

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராதாகிருஷ்ணன், கொரோனா வைரஸோ, நிபா வைரஸோ மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. கேரளாவின் எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் காய்ச்சல் பாதிப்புகளையும் கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தார். முன்னதாக நிபா வைரஸ் எப்படி பரவுகிறது என சுகாதாரத்துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்… பயப்பட வேண்டாம் – சுகாதாரத்துறை செயலர் பேட்டி!

அதில், வௌவால்கள் மூலமாக நிபா வைரஸ் பரவுகிறது. சுகாதாரமற்ற உணவுகளாலும் நிபா வைரஸ் மனிதர்களிடம் நேரடியாக பரவும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, தொண்டை புண் போன்றவை நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளாகும். பழந்திண்ணி வௌவால் மூலமாக நிபா வைரஸ் பரவும் என்பதால் பழங்களை நன்றாக சுத்தம் செய்து உண்ண வேண்டும். பன்றிகள் வளர்க்கப்படும் பண்ணைகளில் சுகாதாரம் பேணப்பட வேண்டும். நிபா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பூசியோ அல்லது உரிய சிகிச்சை முறையோ இதுவரை இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.