தயார்நிலையில் சென்னை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!!

 

தயார்நிலையில் சென்னை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!!

நாளொன்றுக்கு 2 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முயற்சித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தயார்நிலையில் சென்னை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!!

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , “நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு இரண்டு லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முயற்சித்து வருகிறோம். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு மையங்கள் மீண்டும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தயார்நிலையில் சென்னை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!!


பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தொடர்ச்சியாக கடைபிடிக்காமல் இருந்தால் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். சென்னையில் அரசு மருத்துவமனைகளில் 4,992 படுக்கைகள் உள்ளன தனியார் மருத்துவமனைகளில் 3,853 படுக்கைகள் தயாராக உள்ளன அதுமட்டுமல்லாமல் தடுப்பு மையங்கள் என மொத்தமாக 18,852 படுக்கைகள் உள்ளன” என்றார்.