“அடுத்த 28 நாட்களுக்கு மிகுந்த கவனம் தேவை” – சுகாதாரத்துறை செயலாளர் விடுத்த அலெர்ட்!

“அடுத்த 28 நாட்களுக்கு மிகுந்த கவனம் தேவை” – சுகாதாரத்துறை செயலாளர் விடுத்த அலெர்ட்!

தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து கொரோனா உறுதியாகும் நபர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் தற்போது திரும்பிக் கொண்டிருப்பதால் கொரோனா பரவல் அதிகக்கூடும் என்ற நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக அடுத்த 14 முதல் 28 நாட்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் செய்தி அனுப்பியுள்ளார்.

“அடுத்த 28 நாட்களுக்கு மிகுந்த கவனம் தேவை” – சுகாதாரத்துறை செயலாளர் விடுத்த அலெர்ட்!

அதில், ‘தமிழகத்தில் கொரோனா பரவலும், கொரோனா பரிசோதனையும், காய்ச்சல் முகாம்களும் கணிசமாக குறைந்திருக்கிறது. அதனால் வரும் நாட்களில் மிக்க கவனம் தேவை. மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும், குறிப்பாக வெளியூரில் இருந்து வரும் கட்டுமான தொழிலாளிகளால் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் கட்டுமான பகுதிகள், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை எந்த சூழலிலும் குறைக்க வேண்டாம்.

“அடுத்த 28 நாட்களுக்கு மிகுந்த கவனம் தேவை” – சுகாதாரத்துறை செயலாளர் விடுத்த அலெர்ட்!

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பண்டிகை காலத்திற்கு முன் இருந்த அளவிற்கு பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். இல்லையேல், கொரோனா பாதிப்புகள் கண்டிறியப்படாமல் போகக்கூடும். அடுத்த 28 நாட்களுக்கு படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.