கொரோனா சிகிச்சை வார்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

 

கொரோனா சிகிச்சை வார்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

தமிழகத்தில் கொரனோ வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டுமே 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியானது. இவ்வாறு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை வார்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

இதனால், பிற மாவட்டங்களில் இருந்து மக்கள் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் சேர்த்தே 80க்கும் குறைவான ஆக்சிஜன் படுக்கைகள் தான் காலியாக உள்ளன. நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த படுக்கைகள் போதாது என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 360 படுக்கைகள் புதிதாக ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டில் சுகாதாரத்துறை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆக்சிஜன் படுக்கைகள் கையிருப்பு பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.