‘கோவிஷீல்டு பரிசோதனையில் பங்கேற்ற நபருக்கு உடல்நலம் பாதிப்பு’ : இழப்பீடு கேட்டு நோட்டீஸ்!

 

‘கோவிஷீல்டு பரிசோதனையில் பங்கேற்ற நபருக்கு உடல்நலம்  பாதிப்பு’ : இழப்பீடு கேட்டு நோட்டீஸ்!

கோவிஷீல்டு பரிசோதனையில் பாதிப்பு ஏற்பட்டதால் விலகிய நபர், ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் தயாரித்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைகழகத்தில் நடைபெற்று வருகிறது. அதில் பல தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்டு மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த மருந்தை செலுத்திக் கொண்ட 40 வயது நபர் ஒருவருக்கு, 10 நாட்களிலேயே தலைவலி, உடல் அயற்சி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.

‘கோவிஷீல்டு பரிசோதனையில் பங்கேற்ற நபருக்கு உடல்நலம்  பாதிப்பு’ : இழப்பீடு கேட்டு நோட்டீஸ்!

இதனால் கடந்த 12ம் தேதி அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்த முன்னேற்றம் இல்லாததால், தனக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நோட்டீஸ் அளித்துள்ளார். மேலும், கோவிஷீல்டு பரிசோதனையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய அந்த நபரின் வழக்கறிஞர், மருந்து செலுத்தப்பட்ட பிறகே அவரது உடலில் உபாதைகள் இருப்பதாக கூறியிருக்கிறார். அந்த நோட்டீஸுக்கு மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.