கொரோனா நோயாளிகளுக்கு ஷேவிங், ஹேர் டிரையிங் : சுகாதார பணியாளர்களின் புதிய முயற்சி!

 

கொரோனா நோயாளிகளுக்கு ஷேவிங், ஹேர் டிரையிங் : சுகாதார பணியாளர்களின் புதிய முயற்சி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரத்தின் படி நாளொன்றுக்கு 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரனோ சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் சில நோயாளிகள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டிய சூழல் நிலவுகிறது. சில வாரங்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவதால் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா நோயாளிகளுக்கு ஷேவிங், ஹேர் டிரையிங் : சுகாதார பணியாளர்களின் புதிய முயற்சி!

அவர்களை புத்துணர்ச்சி பெற வைக்க சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா வார்டில் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது போன்ற செயல்கள் மூலம் அவர்களை உற்சாகப் படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், ஒடிசாவில் உள்ள எம்கேசிஜி மெடிக்கல் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு சேவிங் மற்றும் ஹேர் டிரையிங் போன்ற பணிகளை சுகாதாரத்துறையினர் செய்வது பாராட்டுகளை பெற்றுள்ளது.

மனதளவில் சோர்வடைந்திருக்கும் நோயாளிகளுக்கு இதை செய்யும் போது புத்துணர்ச்சி கிடைக்கும் என்றும் நம்பிக்கையுடன் அவர்கள் இருப்பார்கள் என்றும் சுகாதாரத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. சுகாதார பணியாளர்களின் தன்னலமற்ற பணியை ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பாராட்டியுள்ளார். பல்வேறு அரசு அதிகாரிகளும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் சுகாதார பணியாளர்களுக்கும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.