வெண்டைக்காயை ஊறவைச்சி சாப்பிட்டா ,சர்க்கரை நோயாளிகளை வாழ வச்சி காக்கும்

 

வெண்டைக்காயை ஊறவைச்சி சாப்பிட்டா ,சர்க்கரை நோயாளிகளை வாழ வச்சி காக்கும்

நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான பல சத்துகளை அளிக்க கூடிய காய் வகைகள் ஏராளம் உள்ளன.

தினமும் ஒவ்வொரு வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம். அதில் வெண்டைக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகின்றது.

வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்டது என்பதால், அது பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் (Pectin) மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். பெருங்குடலின் உள்பகுதியில் படிந்து பெருங்குடல் சிறப்பாகச் செயல்படவும் உதவும்.

`வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும்’ என்பார்கள். கணக்கு வருகிறதோ இல்லையோ ஏராளமான சத்துகளை வாரி வழங்கும் இயற்கையின் கொடை அது. வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல்நதிக்கரை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது. இன்று தமிழகத்தில் அதிகம் விளையும் காய்கறிகளில் ஒன்றாகிவிட்டது.  

வெண்டைக்காயை ஊறவைச்சி சாப்பிட்டா ,சர்க்கரை நோயாளிகளை வாழ வச்சி காக்கும்

இருப்பினும் இதனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? கூடாதா என்ற சந்தேகம் காணப்படும். அந்தவகையில் வெண்டைக்காயை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது நல்லதா? என்பதை தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் சாப்பிடுவது நல்லதா?

வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் கால்சியம் உள்ளது. இது குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெண்டைக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வெண்டைக்காய் அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறி ஆகும், இது நீரிழிவு சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இரைப்பைக் குழாயிலிருந்து உறிஞ்சப்படும் விகிதத்தைக் குறைப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தும், அதிக நார்ச்சத்து இருப்பதால் இது நீரிழிவு எதிர்ப்பு உணவுப் பொருளாக பெயரிடப்பட்டது. நீங்கள் வெண்டைக்காயை துண்டுகளாக வெட்டி இரவில் தண்ணீரில் போட்டு ஊரவச்சி காலையில் அந்த தண்ணீரைக் குடிக்கலாம்.

இது சிறந்த கிளைசெமிக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது

வெண்டைக்காயை எப்படி உணவில் சேர்க்கலாம்?

வெண்டைக்காயை நீங்கள் பல உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம், அதை தனியாகவோ அல்லது வெங்காயம் மற்றும் தக்காளியுடன் கலவையாகவோ பயன்படுத்தலாம்.

 

 வெண்டைக்காயின் விதைகள் தனியாக கடைகளில் கிடைக்கும். தூளாக்கப்பட்ட வெண்டைக்காய் விதைகள் நீரிழிவு நோய்க்கு துணை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது

குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்த அளவில் பெற்றவர்கள் ஆகின்றனர். வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள்  உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள் சரியான விகிதத்தில் சாப்பிடுவது அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்றைய காலங்களில் பலருக்கும் வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் நிவாரணம் ஏற்படும்.