உடலும் ,குடலும் பஞ்சராகாமல் காக்கும் மஞ்சள்.

 

உடலும் ,குடலும்  பஞ்சராகாமல் காக்கும் மஞ்சள்.

நம் முன்னோர்களை காலத்திலிருந்து தமிழர்களின் உணவிலும் ,உணர்விலும் கலந்து விட்ட ஒரு பொருள் எதுவென்றால் அது மஞ்சள்.நம் ஆயுர்வேதத்தில் அதன் சிறப்புகளை எடுத்து சொல்லியுள்ளார்கள். 

turmeric - turmeric stock pictures, royalty-free photos & images

இந்த மஞ்சளின் பெருமையைக் கொண்டு சேர்க்கும் வகையில்  “மஞ்சள் தினம்”  சமீபகாலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மஞ்சளில் அப்படி என்னென்ன பெருமைகள் இருக்கின்றன, அதன் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை ஆயுர்வேத மருத்துவர்கள் கூறியுள்ளார்கள் .

இந்த  மஞ்சளின் மருத்துவ பயன்கள் பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்:–

* மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டினால் தெளிவு ஏற்படும்

* வேனல் கட்டி, விரல் சுற்றி, அடிபட்ட வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து கிளறிச் சூடாக்கி அதை அடிபட்ட இடங்களில் பற்றுப் போட்டால் குணமாகும்.

* மஞ்சள், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப்போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப்புண் போன்றவை குணமாகும். மஞ்சளை அரைத்து சிரங்குகள், அடிபட்ட புண்கள் அல்லது கட்டிகள் போன்ற பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் பூச வேண்டும். கட்டிகளாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாள்கள் பூசிய பிறகு பழுத்து உடைந்துவிடும். பிறகு அதற்குரிய சிகிச்சையைத் தொடர அவை குணமாகும்.

glass bowl of curcuma powder and fresh organic curcuma on slate - turmeric stock pictures, royalty-free photos & images

* உணவாக ஏற்கப்படும் மஞ்சள் தொண்டையிலும் மார்பிலும், இரைப்பையிலும் ஏற்படும் கப அடைப்பை அகற்றி வலியைக் குறைக்கிறது. வாய், நாக்கு, தொண்டை, எகிறு, அண்ணம் முதலிய இடங்களில் ஏற்படும் வேக்காளத்தையும், புண்ணையும் ஆற்றுகிறது. இரைப்பை, குடல் முதலியவைகளுக்குச் சுறுசுறுப்பூட்டி பசி மற்றும் ஜீரண சக்தியை உண்டாக்குகிறது. குடலில் புழு, கிருமி தங்கவிடாமல் வெளியேற்றி விடுகிறது. இத்தனை நல்ல குணமுடையது என்பதால் உணவுப் பொருள்கள் அனைத்திலும் மஞ்சள் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.

* மஞ்சள் தூளைப் பாலில் போட்டுக் காய்ச்சி சாப்பிட வாய்ப்புண், தொண்டை எரிவு, வயிற்றில் எரிவு போன்றவை சரியாகிறது. மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்த வெந்நீரால் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு, சளி முறிந்து எளிதில் வெளியாகும்.

* மஞ்சளை அரைத்து கரப்பான், சொரி, சிரங்கால் ஏற்படும் தோல் நிறக்கேட்டிற்கு மேல்பூச்சாக பூச நிவாரணம் கிடைக்கும். மஞ்சளை விழுதாக அரைத்துச் சுடவைத்துப் பற்றுப்போட வீக்கம் குறையும்.

 மஞ்சளுடன் அரிசி மாவைச் சேர்த்துக் களியாகக் கிண்டியோ, சாதத்துடன் சேர்த்து அரைத்தோ அதை கட்டிகளின் மேல் போட்டால் அது பழுத்து உடையும்.இவ்வளவு சிறப்புகளை கொண்ட மஞ்சளிடம் நாம் தஞ்சமடைந்தால் நம் உடல் பஞ்சராகாமல் காக்கலாம் .

turmeric powder - wooden spoon - turmeric stock pictures, royalty-free photos & images