சளியை நீக்கும்… ஆண்மையைப் பெருக்கும் தூதுவளை!

 

சளியை நீக்கும்… ஆண்மையைப் பெருக்கும் தூதுவளை!

ஒரு காலத்தில் வேலி ஓரங்களில் நமக்கு கிடைத்த கற்பக மூலிகை தூதுவளை. இன்று கிராமங்கள் வரைக்கும் கான்கிரீட் சாலைகள் வந்துவிட்ட நிலையில் சாலை ஓரங்களில் தூதுவளையை பார்ப்பதே அரிதாகிவிட்டது. சிறிய முள்கள் கொண்டது என்பதால் தோட்டங்களில் வேலி பாதுகாப்புக்காகவும் இவை வளர்க்கப்பட்டன. இதன் இலை, பூ, காய், வேர் என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவையாகும்.

சளியை நீக்கும்… ஆண்மையைப் பெருக்கும் தூதுவளை!

கபம் மற்றும் வாதத்தால் ஏற்படக் கூடிய நோய்களுக்கு தூதுவளை சிறந்த மருந்து. அதீத பித்த நீர் சுரப்பைக் கட்டுப்படுத்தும். கால்ஷியம் நிறைந்தது என்பதால் எலும்புகள் உறுதியாக இருக்க உதவும்.

தூதுவளை இலையை அரைத்து சாறு பிழித்து அதனுடன் தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா கட்டுப்படும். ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் கட்டாயம் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தூதுவளை இலையுடன் மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கித் துவையல் செய்து சாப்பிடலாம். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலு பெறும். சளி, இரைப்பு பிரச்னைகள் விலகும்.

தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, தினமும் பாலில் கலந்து அருந்தலாம். இப்படிச் செய்து வந்தால் உடல் வலுப் பெறும்.  ஆண்மையைப் பெருக்கும்.

இலைக்கும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. தினமும் தூதுவளை இலையை உணவில் சேர்த்து வந்தால் இந்திரியம் அதிகரிக்கும்.

தூதுவளை கீரையை நெய்யில் வதக்கித் துவையல் அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி நீங்கும்.

தூதுவளைக் கீரை, வேர், காய் ஆகியவற்றை வற்றல், ஊறுகாய் போல செய்து 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்ணெரிச்சல், மற்றும் கண் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

தூதுவளை செரிமானத்தை சீர்படுத்தும் தன்மை கொண்டது. எனவே, உணவு செரிமானக் குறைபாடு உள்ளவர்கள் இதை எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இது மட்டுமின்றி தொடர்ந்து தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.