சர்க்கரை நோயை சட்டுன்னு விரட்டும் இந்த விதை.

 

சர்க்கரை நோயை சட்டுன்னு விரட்டும் இந்த விதை.

இன்று நம் நாட்டில் பலருக்கும் இருக்கும் பிரச்சினை சர்க்கரை நோய் .இதை கட்டுப்படுத்த எவ்வளவோ ஆங்கில மருந்துகள் இருந்தாலும் ,பல இயற்கை பொருட்களும் குறைக்க உதவுகிறது .அதில் முக்கியப் பங்கு வகிக்கிறது சூரிய காந்தி விதைகள்

சர்க்கரை நோயை சட்டுன்னு விரட்டும் இந்த விதை.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள், எப்போதும்  அதை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது அவசியம். அதற்கு சூரியகாந்தி விதைகள் உதவுகின்றன. இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்துவது குறித்த பல ஆய்வுகள் இதை நிரூபித்துள்ளன. தினமும் ஒரு கைப்பிடியளவு சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டால் ஆறு மாதங்களில்  சர்க்கரையின் அளவு 10 சதவீதம் குறைவதாக கூறப்படுகிறது.

சூரியகாந்தி விதையிலுள்ள குளோரோஜெனிக் அமிலத்தின் காரணமாக சர்க்கரை குறைவதாகக் கூறப்படுகிறது. மேலும்  கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்டிஎல் குறைவதற்கு சூரியகாந்தி விதையிலுள்ள நார்ச்சத்து உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் பி3 (நையஸின்), எல்டிஎல்லை குறைக்கிறது. அதேவேளையில் அதிலுள்ள வைட்டமின் பி5, நல்ல கொலஸ்ட்ராலான எச்டிஎல் அளவை அதிகரிக்கிறது.

sunflower seed oil - sunflower seed stock pictures, royalty-free photos & images

கூர்மையாக கவனிக்கும் திறன் மூளைக்கு வேண்டுமெனில் சூரியகாந்தி விதைகளை சாப்பிடலாம். இதிலுள்ள வைட்டமின் பி6 சத்து மனதை உற்சாகமாக்குகிறது. ஞாபகசக்தியையும் கவனிக்கும் திறனையும் அதிகரிக்கிறது. மேலும் மாதவிடாய்க்கு முன்பு வரக்கூடிய பிஎம்எஸ் எனப்படும் உடல்நல பிரச்னைகள், அவதிகளை சூரியகாந்தி விதைகள் நன்றாக குறைக்கின்றன.

 சரும ஆரோக்கியம், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்தல் ஆகிய குணங்களும்  சூரியகாந்தி விதைக்கு உள்ளன.  சூரியகாந்தி விதையின் கூடானது (உறை) கறுப்பு நிறத்தில் இருக்கும். அதை பற்களால் கடித்து நீக்கிவிட்டு, உள்ளே இருப்பதை மட்டும் சாப்பிட வேண்டும். கூடு நீக்கப்பட்ட சூரியகாந்தி விதைகளை சாலட், யோகர்ட், கஞ்சி மற்றும் ஓட்ஸ்மீல் ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடலாம். . ஒருநாளைக்கு 30 கிராமுக்கு அதிகமாக இதை சாப்பிட வேண்டாம்.