மாம்பழத்துக்குள் மறைந்திருக்கும் மாபெரும் ஆரோக்கிய ரகசியம் -தெரிஞ்சா விடமாட்டிங்க

 

மாம்பழத்துக்குள் மறைந்திருக்கும் மாபெரும் ஆரோக்கிய ரகசியம் -தெரிஞ்சா விடமாட்டிங்க

பழங்களின் அரசன்என்ற சிறப்பு மாங்கனிக்கு உண்டு. முக்கனிகளில் முதன்மை இடம் மாங்கனிக்குத்தான். சுவை மற்றும் சத்துக்களிலும் மாவுக்கு முன்னணி இடம் உண்டு. அதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்.

மாம்பழத்தை எப்படியெல்லாம் சாப்பிடலாம்..?

மாம்பழத்தின் தாயகம் இந்தியாதான். இமயமலை அடிவாரப் பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியது. ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை மட்டும் கிடைக்கும் பழ வகையைச் சேர்ந்தது மா. வட்டம் மற்றும் நீள்வட்ட வடிவங்களில் பல்வேறு அளவுகளில் மாங்கனி விளைகிறது. மஞ்சள், இளஞ்சிவப்பு-மஞ்சள், இளஞ்சிவப்பு-பச்சை நிறங்களில் கனிகள் விளையும்.

வைட்டமின் ஏமாங்கனியில் அதிக அளவில் உள்ளது. இது கண்பார்வைக்கு உகந்த வைட்டமினாகும்.

புதிதாக பறித்த மாங்கனியில் பொட்டாசியம் மிகுதியாக இருக்கும். மேலும் வைட்டமின் பி-6’, ‘வைட்டமின் சி’, ‘வைட்டமின் ஈநிறைய அளவில் உள்ளது. வைட்டமின் சி, உடலை நோய்த் தொற்றுக்கு எதிராக காக்கும்.

மாம்பழத்துக்குள் மறைந்திருக்கும் மாபெரும் ஆரோக்கிய ரகசியம் -தெரிஞ்சா விடமாட்டிங்க

வைட்டமின் பி-6’, மூளைக்கு அவசியமான அமினோ அமிலம் சுரக்க துணைபுரியும். தாமிர தாது நிறைய உள்ளது. இது பல்வேறு நொதிகள் செயல்பட துணைக்காரணியாக விளங்கும். ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியிலும் இது பங்கு வகிக்கிறது. உடனடியாக ஜீரணம் ஆகும் நார்ச்சத்து நிறைய உள்ளது. மற்றும் பல புளோவனாய்டுகளும், தாது உப்புக்களும் குறைந்த அளவில் உள்ளன.

ஆண்களும், பெண்களும் உடலளவில் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு பின்பு ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கி நல்ல குழந்தைப்பேறு ஏற்படும். உடல்சக்தி சத்துக் குறைபாடுகளால்  சிறிது நேரத்திலேயே பலம் இழந்து, உடல் சோர்ந்து விடும். மாம்ப ழத்தில் உடலுக்கு தேவையான பல விட்டமின்கள், தாது சத்துகள் உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு உடல்சக்தி கிடைக்கும்.

ஒரு சிலர் வயிற்றில் பூச்சிகள் தொல்லையால் பல வயிறு சார்ந்த நோய்களால் அவதியுறுவர். மாம்பலத்தில் கிருமிகளை அழிக்கும் சிறந்த இயற்கை ரசாயனங்கள் உள்ளன. இதை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு   ஜீரண உறுப்புக்கள் நன்றாக இருக்கும். நரம்புகள் உடலில் பல பாகங்களுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை நரம்புகள் செய்கின்றன. மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் நன்கு வலுப்பெறும் நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் நீங்கும்.உப்புத்தன்மை அதிகம் கொண்ட நீரை அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உண்டாகிறது. இவர்கள் மாம்பழத்தை அடிக்கடி உண்டு வர சிறுநீரக கற்கள் கரையும்.

எப்படியெல்லாம் சாப்பிடலாம்..?

மாங்கனியை கழுவிவிட்டு அப்படியே கடித்து சாப்பிடலாம். மாங்கனித் துண்டுகள் பழச் சாலட்டுகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. பனிகட்டிகளுடன் சேர்க்கப்பட்ட மாங்கனிச் சாறு உலகம் முழுவதும் பிரபலமான சாறு வகை பானமாகும். மாங்கனிச் சாற்றை பாலுடன் சேர்த்து மாங்கோ மில்க் ஷேக்ஆக சுவைக்கப்படுகிறது. ஜாம், பனிக்கூழ் மற்றும் உணவு உற்பத்தி துறையில் மாம்பழம் பயன்படுத்தப்படுகிறது. ஆசிய நாடுகளில் மாங்காய் ஊறுகாய், சட்னி பிரபலமாகும். பழுக்காத மாங்காய், குழம்புகளிலும் சேர்க்கப்படுகிறது.