இதயம் காக்கும், வெயிட் லாஸ் செய்யும் வீகன் டயட்!

 

இதயம் காக்கும், வெயிட் லாஸ் செய்யும் வீகன் டயட்!

இறைச்சி, மீன் மட்டுமின்றி முட்டை, பாலைக் கூட தவிர்க்கும் சுத்தமான சைவ உணவு முறை வீகன் டயட். தமிழில் இதை நனிசைவம் என்று சொல்வார்கள். இதில் முழுக்க முழுக்க தாவர உணவுகள் மட்டுமே பயன்படுத்தப்படும். காபிக்கு பால் வேண்டுமென்றாலும் கூட சோயா போன்றவற்றில் இருந்து பெறப்பட்ட பாலைத்தான் இதில் பயன்படுத்துவார்கள்.

இதயம் காக்கும், வெயிட் லாஸ் செய்யும் வீகன் டயட்!

வீகன் டயட் உடல் எடையைக் குறைக்க உதவும், இதயத்தைப் பாதுகாக்கும், டைப் 2 சர்க்கரை நோயிலிருந்து காக்கும் என்று எல்லாம் சொல்லப்படுகிறது. வீகன் டயட்டின் பயன்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

1. ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

அசைவ உணவு, விலங்கிடமிருந்து பெறப்பட்ட பொருள் என எதுவும் இல்லை என்றாலும் பல முக்கிய ஊட்டச்சத்துக்கு பஞ்சமே இல்லை வீகனில் என்கின்றது ஆய்வு. வீகன் டயட்டில் அதிக அளவில் நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடண்ட் கிடைக்கிறது. அதிக அளவில் பொட்டாசியம், மக்னீஷியம், ஃபோலேட், வைட்டமின் சி, ஏ, இ கிடைக்கிறது. வீகன் டயட்டுக்கு மாறுவது முக்கியமில்லை, ஊட்டச்சத்து பற்றாக்குறை இன்றி உணவுகளை எப்படி எடுத்துக்கொள்வது என்பதுதான் முக்கியம் என்கிறனர் ஆய்வாளர்கள்.

2. உடல் எடை குறையும்

வீகன் டயட்டுக்கு பலரும் மாற முக்கியக் காரணம் அதன் உடல் எடை குறையும் பலன்தான். விலங்கின் இறைச்சி, பால், முட்டை, சீஸ் போன்ற அனைத்தும் தவிர்க்கப்படுகிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறி, பழங்கள், தானியங்கள் மட்டுமே எடுக்கப்படுகிறது. நார்ச்சத்து முதல் அத்தியாவசிய சத்துக்கள் கிடைப்பதால் உடல் எடை சாத்தியமாகிறது. சில நேரங்களில் பி.எம்.ஐ-விட குறைந்துவிடுகிறது என்று கூட குற்றச்சாட்டு எழுகிறது.

3. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதுதான் உடலில் பல பிரச்னைகள் எழ காரணம். வீகன் டயட் உட்கொள்பவர்களுக்குச் சர்க்கரை அளவு குறைகிறது, இன்சுலின் சென்சிடிவிட்டி 50 முதல் 78 சதவீகிதம் வரை அதிகரிக்கிறது. இதனால், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைந்தால் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

4) சில வகையான புற்றுநோயைத் தடுக்கிறது

சில வகையான உணவுகளை நம்முடைய உணவுப் பழக்க வழக்கத்தின் மூலம் தவிர்க்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. தினமும் இயற்கை தானியங்களை, காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவது பெருங்குடல் புற்றுநோய் முதல் பல்வேறு வகை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வீகன் டயட்டில் அதிக அளவில் சோயா பயன்படுத்தப்படுகிறது. அது மார்பக புற்றுநோயைத் தடுக்கிறது.

5) இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது

இயற்கை உணவு எடுத்துக்கொள்வது ரத்த நாளங்களைக் காப்பதுடன், இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. மற்றவர்களைக் காட்டிலும் வீகன் டயட் பின்பற்றுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 43 சதவிகிதம் குறைவாக இருக்கிறதாம். உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு 75 சதவிகிதம் குறைகிறதாம். உயர் ரத்த அழுத்தம் இல்லை என்றாலே இதயம் ஆரோக்கியமாக இருக்கும். வீகன் டயட்டில் உள்ள பல மூலக்கூறுகள் சர்க்கரை அளவு, எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பு அளவைக் குறைப்பதுதான் இதற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.