உலகம் முழுக்க ஆரஞ்சு பழத்தை விரும்ப என்ன காரணம் தெரியுமா?

 

உலகம் முழுக்க ஆரஞ்சு பழத்தை விரும்ப என்ன காரணம் தெரியுமா?

உலகம் முழுவதும் உள்ள மக்களின் விருப்ப பழமாக ஆரஞ்சு உள்ளது. சாமானியர்கள் முதல் சகலமும் உள்ளவர்கள் வரை எடுத்துக்கொள்ளும் பழமாகவும் ஆரஞ்சு உள்ளது. இதன் மருத்துவ குணங்கள் காரணமாக தினசரி எடுத்துக்கொள்ளும் ஜூஸாக பலருக்கு ஆரஞ்சு மாறிவிட்டது. ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.

உலகம் முழுக்க ஆரஞ்சு பழத்தை விரும்ப என்ன காரணம் தெரியுமா?

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. ஒரு ஆரஞ்சு பழத்தில் இருந்து மட்டும் நம்முடைய ஒரு நாள் தேவையைக் காட்டிலும் அதிக அளவில் வைட்டமின் சி கிடைக்கிறது. அதாவது ஒரு நாள் தேவையில் 116.2 சதவிகிதம் அளவுக்கு வைட்டமின் சி கிடைத்துவிடுகிறது. இந்த வைட்டமின் சி நம்முடைய மரபணு அளவில் ஏற்படும் மாற்றங்களைத் தடுக்கிறது. புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகளில் இருந்து நம்மைக் காக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது ஆரஞ்சு. தொடர்ந்து ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் சாதாரண ஃப்ளு காய்ச்சல் முதல் காது தொற்று வரை எதுவும் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

180 கிராம் எடை கொண்ட ஆரஞ்சில் ஒரு நாளைக்குத் தேவையான 18 சதவிகித நார்ச்சத்து கிடைத்துவிடுகிறது. இது செரிமான மண்டலத்தை மேம்படுத்த, உடல் எடை மற்றும் ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைய உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதையும் தடுக்கிறது.

ஆரஞ்சில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதில் உள்ள ஃபிளவனாய்ட்ஸ் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி ஆக்சிடண்ட்கள் சருமத்தில் நடைபெறும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் இழப்பைச் சரி செய்ய உதவுகின்றன. இதன் காரணமாக முதுமை தாமதப்படுகிறது. இளமையான தோற்றத்தைத் தக்க வைக்கும் என்பதற்காகவே பலரும் ஆரஞ்சு ஜூலை காலையில் எடுத்துக்கொள்கின்றனர்.

ஆரஞ்சில் வைட்டமின் பி6 அதிக அளவில் உள்ளது. இது ரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) உற்பத்திக்கு உதவியாக இருக்கிறது. இதில் உள்ள மக்னீஷியம் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் காக்கிறது.

ஆரஞ்சில் கரோட்டினாய்ட்ஸ் அதிக அளவில் உள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்தைக் காக்க உதவுகிறது. வயது அதிகரிப்பால் கண்களில் ஏற்படும் தசைகள் செயல்திறன் குறைவு உள்ளிட்டவற்றைத் தள்ளிப்போடும் திறன் ஆரஞ்சுக்கு உள்ளது.