இளைஞர்களே !இப்பவே இதை ஊற வச்சி சாப்பிட்டா ,கல்யாணத்துக்கப்புறம் வாழ வச்சி பார்க்கும்

 

இளைஞர்களே !இப்பவே இதை ஊற வச்சி சாப்பிட்டா ,கல்யாணத்துக்கப்புறம்  வாழ வச்சி பார்க்கும்

உலர் திராட்சையில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரு டம்ளர் நீரில் 10 உலர் திராட்சைகளை ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உண்டால் சிறுநீரக தொற்று நோய்கள் குணமாகும். அதே உலர் திராட்சைகளை நீரில் கொதிக்க வைத்து, அருந்தினால் குடல் புண்கள் குணமாகும். உடல் வெப்பம் தணிவதற்கும்

உலர் திராட்சை பெரிதும் பயன்படுகிறது. பாலில் உலர் திராட்சைகளை இட்டு, காய்ச்சி குடித்தால் இதயத் துடிப்பு சீராகும்.

இளைஞர்களே !இப்பவே இதை ஊற வச்சி சாப்பிட்டா ,கல்யாணத்துக்கப்புறம்  வாழ வச்சி பார்க்கும்

உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை உள்ளது. இந்த திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் உண்டு. உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து, இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.

இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம். குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்

சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதற்றத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி, ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் கஷ்டப்பட்டால், தினமும் உலர் திராட்சையை ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.

கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் 25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.