ஆண்மையை அதிகரிக்க உதவும் அஸ்வகந்தா!

 

ஆண்மையை அதிகரிக்க உதவும் அஸ்வகந்தா!

ஆண்மை குறைபாடு என்றாலே தாம்பத்திய பிரச்னை என்று அர்த்தம் ஆகிவிட்டது. விறைப்புத் தன்மை குறைபாடு, விந்தணு சீக்கிரம் வெளிப்படுதல் என்று பல்வேறு பிரச்னைகள் இதில் அடங்கியுள்ளது.

விறைப்புத் தன்மை உள்ளிட்ட பிரச்னைக்கு அஸ்வகந்தா சிறந்த தீர்வை வழங்கும். இது பாலுணர்வைத் தூண்டுகிறது. குறிப்பாக ஆண்களுக்கு பாலுணர்வு அதிகரிக்க, விரைப்புத் தன்மை நீடிக்க தொடர்ந்து அஸ்வகந்தா எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் எட்டு வாரங்கள் தொடர்ந்து அஸ்வகந்தா எடுத்துக்கொண்டவர்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரித்து தாம்பத்தியம் மகிழ்ச்சியானதாக மாறியதாக தெரியவந்துள்ளது.

ஆண்மையை அதிகரிக்க உதவும் அஸ்வகந்தா!

நம்முடைய தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் ஆகியவை ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகளுக்கு அஸ்வகந்தாவை பரிந்துரைக்கிறது. இது இயற்கையானது என்பதால் பக்கவிளைவுகள் இல்லை.

விறைப்பு தன்மை பிரச்னைக்கு மட்டுமின்றி, குழந்தையின்மை பிரச்னைக்கும் அஸ்வகந்தா தீர்வளிக்கிறது. தொடர்ந்து அஸ்வகந்தா சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. விந்தணுக்களின் இடப்பெயர்வும் அதிகரிக்கிறது. இதனால், கருத்தரித்தலுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

அஸ்வகந்தா இனப்பெருக்க மண்டலத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடலுக்கும் பலன் தரக்கூடியதாக உள்ளது. மூளை நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதனால், உடலில் உள்ள சேர்வு நீங்கி, சுறுசுறுப்பு அதிகரிக்கிறது. தூக்கமும் வரும்.

டைப் 2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் அஸ்வந்தாவை நம்பி எடுத்துக்கொள்ளலாம். மேலும் செரிமானப் பிரச்னையையும் அஸ்வகந்தா நீக்குகிறது.

ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் அஸ்வகந்தா பயன்தரும். வெள்ளைப்படுதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அஸ்வகந்தா நல்ல தீர்வை அளிக்கும்.

குறிப்பு: அஸ்வகந்தா நல்லதுதான்… ஆனால் சுய மருத்துவம் கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்று எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்வது நல்லது.