கரு முதல் பரு வரை பயன் தரும், தெருவோரம் கிடைக்கும் இந்த பொருள்.

 

கரு முதல் பரு வரை பயன் தரும், தெருவோரம் கிடைக்கும் இந்த பொருள்.

.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சோற்று கற்றாழை  பல நோய்களுக்கு  மருந்தாகப் பயன்படுகின்றன . குறிப்பாக ஆண்மை விருத்திக்கு நல்ல பலனளிக்கிறது .சோற்றுக்கற்றாழை தெருவோரங்களில் இருப்பதால் இதன் அருமை பலருக்கு புரியவில்லை என்று கூறலாம்.

கரு முதல் பரு வரை பயன் தரும், தெருவோரம் கிடைக்கும் இந்த பொருள்.

இந்த சோற்று கற்றாழையை  சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்துகொள்ள வேண்டும் பிறகு அதை உலர வைத்து பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய உறவு மேம்படும்.ஆண்களுக்கு ஆண்மை அதிகரித்து ,குழந்தை பேருக்கு வழி வகுக்கும் .

சோற்றுக் கற்றாழையை உண்பதால் ஆண்கள் மற்றும் பெண்களின் சிறுநீர் தாரையில் உள்ள புண் எரிச்சல், குணமாகும்.சோற்றுக் கற்றாழைச் சாறை தினமும் இரண்டு அவுன்ஸ் குடிப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் கொழுப்பு அடைப்பு வராமல் இருக்கும்.தினமும் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறைய தொடங்கும், உஷ்ணம் கல்  அடைப்புகள் சரியாகும்.மேலும் இது தோலில் ஏற்படும் தீக்காயம், வெட்டுக்காயம் ஆகியவற்றிற்கும் சளி ,குடல்புண் ஆகியவற்றுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

மூல நோயால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு கற்றாழை மிகச்சிறந்த மருந்தாகும் இதன் சதைப் பகுதியை கழுவி அதனுடன் இரண்டு கைப்பிடியளவு முருங்கைப் பூ சேர்த்து அம்மியில் வைத்து அரைக்க வேண்டும் அதனுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து எலுமிச்சை அளவுக்கு தினமும் காலையில் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் மூல தொந்தரவுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

சோற்றுக் கற்றாழை ஜூஸ்: சோற்றுக் கற்றாழையின் தோலை நன்றாக சீவி உள்ளே இருக்கும் சோற்றை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள், அதனுடன்  சிறிதளவு எலுமிச்சை பழம் பிழிந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். இதனை தினமும் குடித்து வந்தால் உடல் சூட்டினால் ஏற்படும் பருக்கள் தோலில் உள்ள கருமை போன்றவை குணமாகும்.