கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 87.56% ஆக அதிகரிப்பு!

 

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 87.56% ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிகையும் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக நாளொன்றுக்கு கொரோனா பரவலின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 90 ஆயிரத்துக்கும் மேல் இருந்து வந்த நிலையில், தற்போது 60 முதல் 70 ஆயிரமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 87.56% ஆக அதிகரிப்பு!

அதில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 73.70 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 895 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1.12 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 64.53 லட்சம் பேர் குணமடைந்ததால் தற்போது 8.04 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.52% ஆக குறைந்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 87.58% ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.