“ரூ.6க்கு ஹெட்செட் ;டெம்பர் கிளாஸ்” – அலைமோதிய கூட்டம்; கடைக்கு சீல் வைத்த மாநகராட்சி!

 

“ரூ.6க்கு ஹெட்செட் ;டெம்பர் கிளாஸ்” – அலைமோதிய கூட்டம்; கடைக்கு சீல் வைத்த மாநகராட்சி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் ஊரடங்கு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

“ரூ.6க்கு ஹெட்செட் ;டெம்பர் கிளாஸ்” – அலைமோதிய கூட்டம்; கடைக்கு சீல் வைத்த மாநகராட்சி!

இதனால் மக்கள் மீண்டும் சாலைகளில் வாகனங்களில் பயணிப்பதும், சந்தைகளில் கூடுவதும் ஆரம்பமாகியுள்ளது. இருப்பினும் மக்கள் தொடர்ந்து முகக்கவசத்துடன், சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

“ரூ.6க்கு ஹெட்செட் ;டெம்பர் கிளாஸ்” – அலைமோதிய கூட்டம்; கடைக்கு சீல் வைத்த மாநகராட்சி!

இந்நிலையில் நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் புதிதாக திறக்கப்பட்ட மொபைல் கடையில் ஆறு ரூபாய்க்கு ஹெட்செட், டெம்பர் கிளாஸ் குறைந்த நாட்களுக்கு விற்பனை என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் ஆறு ரூபாய்க்கு ஹெட்செட், டெம்பர் கிளாஸ் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியதால் கடைக்கு மாநகராட்சி சீல் வைத்தது.