புனித யாத்திரைக்கு உத்தரகாண்ட் அரசு அனுமதி…. எதிர்ப்பு தெரிவிக்கும் பத்ரிநாத் கோயில் தலைமை பூசாரி…

 

புனித யாத்திரைக்கு உத்தரகாண்ட் அரசு அனுமதி…. எதிர்ப்பு தெரிவிக்கும் பத்ரிநாத் கோயில் தலைமை பூசாரி…

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் மலை வாழிடமான பத்ரிநாத்தில் பத்ரிநாராயணன் கோயில். இந்த கோயிலைத்தான் பத்ரிநாத் கோயில் என்று அழைக்கின்றனர். இது வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இமயமலையின் கடும் குளிர் காரணமாக இது ஆண்டுக்கு ஆறுமாதங்கள் (ஏப்ரல் கடைசி முதல் நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்படும். இந்த ஆண்டு கடந்த மாதம் 15ம் தேதி முதல் பத்ரிநாத் கோயில் திறக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக பக்தர்கள் கோயில் பகுதிக்குகள் அனுமதிக்கப்படவில்லை.

புனித யாத்திரைக்கு உத்தரகாண்ட் அரசு அனுமதி…. எதிர்ப்பு தெரிவிக்கும் பத்ரிநாத் கோயில் தலைமை பூசாரி…

இந்நிலையில் இம்மாதம் 8ம் தேதி முதல் கோயில்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து உத்தரகாண்டில் அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான அரசு ஜூன் 8ம் தேதிக்கு பிறகு ‘சார் தாம் யாத்திரை’யை (கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் ஆகிய 4 புண்ணிய தலங்களுக்கும் செல்லும் யாத்திரை) குறிப்பிட்ட வரைமுறை அடிப்படையில் தொடங்குவது குறித்து பரிசீலிக்கும் என்றும் தற்போதைய கொரோனா வைரஸ் நிலவரத்தை மனதில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தது.

புனித யாத்திரைக்கு உத்தரகாண்ட் அரசு அனுமதி…. எதிர்ப்பு தெரிவிக்கும் பத்ரிநாத் கோயில் தலைமை பூசாரி…

ஆனால், சார் தாம் யாத்திரையை இம்மாதம் இறுதி வரை ரத்து செய்யும்படி பத்ரிநாத் கோயிலின் தலைமை பூசாரி உத்தரகாண்ட் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரகாண்ட் முதல்வருக்கு பத்ரிநாத் கோயிலின் தலைமை பூசாரி உள்பட 24 பேர் கையெழுத்திட்டு அனுப்பிய குறிப்பாணை பத்ரிநாத்துக்கான யாத்திரையை இம்மாதம் 30ம் தேதி வரை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. பத்ரிநாத் கோயிலின் தர்மதிகாரி புவன் சந்திரா யூனியல் இது குறித்து கூறுகையில், பத்ரிநாத்தில் சுகாதார உள்கட்டமைப்பு மோசமாக உள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில் யாத்திரை தொடங்குவது ஆபத்தானது. எனவே ஜூன் 30ம் தேதி வரை யாத்திரையை நிறுத்தி வைக்குமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.