ஆறுதலையும், இரங்கலையும் சரணுக்கு சொல்லிவிட்டார்! அப்புறம் எதற்கு அறிக்கை? அஜீத் தரப்பின் நியாயமான கேள்வி?

 

ஆறுதலையும், இரங்கலையும் சரணுக்கு சொல்லிவிட்டார்! அப்புறம் எதற்கு அறிக்கை? அஜீத் தரப்பின் நியாயமான கேள்வி?

பாட்டுத்தலைவன் எஸ்.பி.பி. மறைவுக்கு இந்தியாவே இரங்கல் தெரிவித்தது;அஞ்சலி செலுத்தியது. குடியரசுத்தலைவர் முதல் பாரத பிரதமர், மாநில முதல்வர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். ரஜினி, கமல், இளையராஜா போன்ற நட்சத்திரங்கள் வீடியோ மூலமாக தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

எஸ்.பி.பியின் மறைவுக்கு முதல் நாளில் கமல், மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார். ஆனால், ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கும் ரஜினி, தன் மூலமாக தொற்று ஏதும் பரவி படப்பினருக்கு தீங்கு நேரிடும் என்றே கருதி மருத்துவமனைக்கு சென்று விசாரிக்கவில்லை என்று சொல்கிறார்கள். நேரில் சென்று அஞ்சலி செலுத்தாததற்கும் அதுதான் காரணம் என்கிறார்கள்.

ஆறுதலையும், இரங்கலையும் சரணுக்கு சொல்லிவிட்டார்! அப்புறம் எதற்கு அறிக்கை? அஜீத் தரப்பின் நியாயமான கேள்வி?

பல நட்சத்திரங்கள் நேரில் வந்து எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தினாலும், முக்கிய நட்சத்திரங்கள் பலரும் அஞ்சலி செலுத்த வரவில்லை.

ஆனாலும், விஜய் – அஜீத் இருவர் மட்டும் ஏன் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்ற கேள்விதான் ரசிகர்கள் மத்தியில் பெரிய சலசலப்பு ஏற்பத்தியது. இதனால் சமூக வலைத்தளங்களில் கடுமையாக இருவரும் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலையில் எஸ்.பி.பியின் இறுதிச்சடங்கின்போது சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார் விஜய்.

ஆறுதலையும், இரங்கலையும் சரணுக்கு சொல்லிவிட்டார்! அப்புறம் எதற்கு அறிக்கை? அஜீத் தரப்பின் நியாயமான கேள்வி?

விஜய் படங்களுக்கு பாடியதோடு மட்டும் அல்லாது, அவருக்கு தந்தையாகவும் நடித்த எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தியது, ரசிகர்களை திருப்திப்படுத்தியது. கடைசி நேரத்தில் வந்தாவது அஞ்சலி செலுத்திவிட்டாரே என்று அத்தோடு அவரை விட்டார்கள். அதே நேரத்தில் விஜய்க்கு போட்டியாளராக கருதப்படும் அஜீத்தை பிடித்துக்கொண்டனர் நெட்டிசன்கள்.

விளம்பர படங்களில் நடித்து வந்த அஜீத், ‘பிரேம புஸ்தகம்’ தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் நடிக்க வந்ததற்கு எஸ்.பி.பிதான் காரணம். அவரின் சிபாரிசின் பேரில்தால் அஜீத்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இப்படி எல்லாம் இருந்தும், எஸ்.பி.பி. மருத்துவமனையில் 51 நாட்கள் சிகிச்சையில் இருந்தபோதும், ஒரு தகவல் கூட தெரிவிக்காத அஜீத், எஸ்.பி.பி. மறைந்த பிறகும் கூட ஒரு இரங்கல் அறிக்கை வெளியிடவில்லை. நேரில் வந்து அஞ்சலியும் செலுத்தவில்லை என்று தாளித்து எடுக்கிறார்கள்.

ஆறுதலையும், இரங்கலையும் சரணுக்கு சொல்லிவிட்டார்! அப்புறம் எதற்கு அறிக்கை? அஜீத் தரப்பின் நியாயமான கேள்வி?

இதுகுறித்து நாம் அஜீத் தரப்பில் விசாரித்தபோது, எஸ்.பி.பி. மகன் சரணும், அஜீத்தும் ஒன்றாக மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்தார்கள். விளம்பர படங்களில் நடித்து வந்த காலத்தில் செண்டிமெண்டாக சரண் டிரஸ்களைத்தான் அணிந்து செல்வார் அஜீத். அந்த அளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்கள். சரண் குடும்பத்தினருடன் அஜீத் எப்போதும் நெருக்கமாகவே இருந்து வருகிறார். அப்படிப்பட்டவரா நண்பர் சரணிடம் எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து விசாரிக்காமல் இருப்பார். எஸ்.பி.பி. மறைவுக்கும் நண்பர் சரணிடம் பேசியிருப்பார். நட்பு அடிப்படையில் கொரோனா காலம் என்பதால் நேரில் அஞ்சலி செலுத்த வர வேண்டாம் என்று சொல்லியிருப்பார் சரண்’’என்றனர்.

இரங்கல் அறிக்கையாவது வெளியிட்டிருக்கலாமே என்று கேட்டதும், ‘’சம்பந்தப்பட்டவர்களிடம் நேரில் பேசிவிட்டார் அஜீத். அப்புறம் எதற்கு அறிக்கை? யாருக்கு ஆறுதல் சொல்ல வேண்டுமோ, யாருக்கு இரங்கல் சொல்ல வேண்டுமோ அவர்களுக்கு சொல்லிவிட்டார். பிறகு எதற்கு அறிக்கை? யாருக்கு அறிக்கை?’’ என்று கேட்கிறார்கள்.

அந்த கேள்வியிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.