பணக்காரர் லிஸ்ட்டில் பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க்கை முந்திச் சென்றது இவர்தான்!

 

பணக்காரர் லிஸ்ட்டில் பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க்கை முந்திச் சென்றது இவர்தான்!

உலகின் பணக்காரர் லிஸ்ட்டில் இடம்பெறுவது என்பது பல நாட்டில் உள்ள செல்வந்தர்களில் கனவு. ஆனால், அந்த லிஸ்ட்டும் நிரந்தர மில்லை. ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கும் ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும்.

இப்போது, உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்த மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், தற்போது சரிந்து கீழே வந்துள்ளார். பில்கேட்ஸுக்கே அந்த நிலையா என்று நினைக்க வேண்டாம். பின்னே வந்தவர் முந்திச் சென்றுள்ளார் அவ்வளவுதான்.

பணக்காரர் லிஸ்ட்டில் பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க்கை முந்திச் சென்றது இவர்தான்!

எலான் மஸ்க் என்பவரே பில்கேட்ஸை பின்தள்ளி முன்சென்றவர்.  49 வயதான எலான் மஸ்க், சவுத் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். 2002 ஆம் ஆண்டுமுதல் அமெரிக்க குடிமகன் உரிமையைப் பெற்றவர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை 18 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியவர். அதன் தலைமையிடம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. 8,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு பணியாற்றி வருகிறார்கள்.

எலான் மஸ்க்கின் பங்கு மதிப்பு சட்டென்று உயர்ந்ததால், டக்டக்கென்று பணக்காரர் லிஸ்ட்டில் உயர்ந்துகொண்டே இருக்கிறார். சில நாட்களுக்கு முன்தான் ஃபேஸ்புக் நிறுவனம் மார்க்கை முந்தினார். இப்போது பில்கேட்ஸை முந்திச் சென்றிருக்கிறார். இதனால், பில்கேட்ஸ் மூன்றாம் இடத்திற்கு சரிந்திருக்கிறார்.

பணக்காரர் லிஸ்ட்டில் பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க்கை முந்திச் சென்றது இவர்தான்!

எலான் மாஸ்க்கின் சொத்து மதிப்பு அமெரிக்க டாலரில் 127 பில்லியன் எனக் கூறப்படுகிறது. முதலிடத்தில் நீண்ட நாட்களாக இருப்பவர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ்.  அவரின் சொத்து மதிப்பு சுமார் 180 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரை தொட இன்னும் பல ஆண்டுகளாகக் கூடும் என்று பேசப்படுகிறது.