இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு இடைக்கால கோச் இவர்தான்!

 

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு இடைக்கால கோச் இவர்தான்!

ஆண்கள் கிரிக்கெட் போட்டிகள் போலவே மகளிர் கிரிக்கெட் போட்டிகளின் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஐ.சி.சி தர வரிசைப் பட்டியலின் படி 1,,163 புள்ளிகளை எடுத்து எட்டாம் இடத்தில் உள்ளது. (முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும் இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளன)

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு இடைக்கால கோச் இவர்தான்!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இதுவரை  167 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளது. அவற்றில் 56 போட்டிகளில் வெற்றியும் 106 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் தற்போதைய கேப்டன் சாமரி அட்டப்பட்டு. இவர் ஒரு நாள் போட்டிகளில் 5 முறை சதம் அடித்தவர். அதிகபட்ச ரன்கள் 178.

சென்ற மாதம் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீபாலி வீரக்கொடி அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் ஒருநாள் போட்டிகளில் 58 விக்கெட்டுகளும் 20 ஓவர் போட்டிகளில் 31 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு இடைக்கால கோச் இவர்தான்!

இலங்கை மகளிர் அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக லங்கா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை அணியின் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ் மேனாகவும் விளையாடியவர். 11 ஒருநாள் போட்டிகளிலும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியவர்.

இவரின் வருகைக்குப் பிறகு இலங்கை மகளிர் கிரிகெட் அணி, தர வரிசைப் பட்டியலில் முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.