“பலருக்கும் அவர் நம்மவர்; எனக்கு நல்லவர்” : கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

 

“பலருக்கும் அவர் நம்மவர்; எனக்கு நல்லவர்”  : கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

“பலருக்கும் அவர் நம்மவர்; எனக்கு நல்லவர்”  : கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

உலக நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல் ஹாசன் இன்று தனது 66 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் காலை முதல் கமல் ஹாசனை சந்திக்க அவரது ரசிகர்களும், தொண்டர்களும் அவரது ஆழ்வார்பேட்டை வீட்டின் முன் குவிந்தனர். இதையடுத்து அவர் வெளியில் வந்து காரில் நின்றவாறு ரசிகர்களை சந்தித்தார்.

இந்நிலையில் கமல் ஹாசனின் 66 ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“பிறந்தநாள் என்பது
சில மெழுகுவத்திகளை அணைப்பதல்ல;
சில தீபங்களை ஏற்றுவது.

இருளைப் புறங்காண
தீபங்கள் ஏற்றத் தெரிந்தவர்
நண்பர் கமல்ஹாசன்.

“பலருக்கும் அவர் நம்மவர்; எனக்கு நல்லவர்”  : கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

தொலைபேசியில்
அழைத்து வாழ்த்தினேன்.

பலருக்கும் அவர் நம்மவர்;
எனக்கு நல்லவர். வாழ்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கமல் ஹாசனின் பிறந்தநாளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.