இவர் தத்தி அல்ல;அக்மார்க் ஆங்கிலேய அடிமை-வைரமுத்துவை விளாசும் எச்.ராஜா

 

இவர் தத்தி அல்ல;அக்மார்க் ஆங்கிலேய அடிமை-வைரமுத்துவை விளாசும் எச்.ராஜா

ஆங்கிலேயனிடம் இருந்துதான் எங்களுக்கு அறிவு கிடைத்தது என்று கவிஞர் வைரமுத்து சொல்லி இருப்பதாக சொல்லி, இந்த தத்திக்கு தெரியாத விஷயம், ஆங்கில இலக்கியத்திற்கு வயது 1000 ஆண்டுகள் கூட முழுமையாக கிடையாது என்பதும், அப்படி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இலக்கியங்களும் அரைவேக்காட்டு இலக்கியங்கள் தான் என்பதும்.. என்று பதிவிட்டிருக்கிறார் தமிழக பாஜக நிர்வாகி கல்யாண். இந்த பதிவிற்கு, இவர் தத்தி அல்ல அறிந்தே அந்நியரை ஆதரிக்கும் அக்மார்க் ஆங்கிலேய அடிமை கும்பல் என்று தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா.

இவர் தத்தி அல்ல;அக்மார்க் ஆங்கிலேய அடிமை-வைரமுத்துவை விளாசும் எச்.ராஜா

கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கும் தமிழாற்றுப்படை நூலில் 19ஆவது கட்டுரையாக கால்டுவெல் பற்றி எழுதியிருக்கிறார். இந்த கட்டுரையில் கால்டுவெல் குறித்தும் தமிழ் மொழி குறித்தும் வைரமுத்து பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், 2018ம் ஆண்டில் இது தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்டார். தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்றும் திராவிடம் என்பது வெறும் சொல்லல்ல மறுக்கமுடியாத மானுட கலாச்சாரம் என்றும் அறிவுலகத்திற்கு அறிவித்தவர் கால்டுவெல்.

இவர் தத்தி அல்ல;அக்மார்க் ஆங்கிலேய அடிமை-வைரமுத்துவை விளாசும் எச்.ராஜா

கால்டுவெல் மட்டும் திராவிடம் என்ற இன குறியீட்டை கண்டறியாது இருந்திருந்தால் நமக்கு அடையாளம் இல்லை. வீழ்த்தப்பட்ட தமிழர்கள் இன்று அடைந்திருக்கும் வெற்றியும் இல்லை. மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை, மறைமலையடிகள், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய திராவிட சிங்கங்கள் இல்லை என்று வைரமுத்து சொல்லியது திராவிடம் என்ற இன குறியீட்டை கால்டுவெல் கண்டறியாத இருந்தால் தமிழர்களுக்கு அடையாளம் இல்லை ஆதாரம் இல்லை, கீர்த்தி இல்லை என்று வைரமுத்து வர்ணித்து இருப்பது அவருடைய பாணியில் கூறுவதென்றால் கவிதைக்குப் பொய்யழகு என்பதுபோல் கட்டுரைக்கும் பொய்யழகு. கால்டுவெல்லை பெருமை படுத்துவதற்காக தமிழையும் தமிழர் பெருமிதங்களையும் சிறுமைப்படுத்த வேண்டுமா கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதாமல் போயிருந்தாலும் தமிழ் வளர்ச்சியும் தமிழர் வளர்ச்சியின் தடைப்பட்டிருக்காது. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையும் , மறைமலை அடிகளாரும் தமிழறிஞர்கள் ஆகச் சிறந்திருப்பார்கள். அண்ணா மக்கள் தலைவராக வளர்ந்து இருப்பார் என்று தெரிவித்திருந்தார்.

இவர் தத்தி அல்ல;அக்மார்க் ஆங்கிலேய அடிமை-வைரமுத்துவை விளாசும் எச்.ராஜா

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் தயாரித்த ஆங்கிலம் – ஆங்கிலம் – தமிழ் அகராதி வெளியீட்டு விழா 2009ம் ஆண்டில் சென்னையில் ஜூலை 23ம் தேதி நடந்தது. கவிஞர் வைரமுத்து அகராதியை வெளிபேசியபோது, ஆங்கிலேயர்கள் உள்நாட்டை இணைக்கும் தண்டவாளம், உலகத்தை இணைக்கும் ஆங்கிலம் ஆகிய இரு நல்ல விஷயங்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். சீனர்களும், ஜப்பானியர்களும் ஆங்கிலத்தை கற்கத் துவங்கியுள்ள நிலையில், இந்தியர்கள் ஆங்கிலத்தை முறைப்படி கற்றதால்தான் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் துறையில் சிறந்து விளங்குகின்றனர் என்றார்.

இந்நிலையில், ஆங்கிலேயனிடம் இருந்துதான் எங்களுக்கு அறிவு கிடைத்தது என்று கவிஞர் வைரமுத்து சொல்லி இருப்பதாக சொல்லி, கடும் கண்டனம் எழுந்திருக்கிறது.