வட்டி வருவாய் அதிகரித்தும் லாபம் சுமாருதான்… எச்.டி.எப்.சி. லாபம் ரூ.2,925.8 கோடி

வட்டி வருவாய் அதிகரித்தும் லாபம் சுமாருதான்… எச்.டி.எப்.சி. லாபம் ரூ.2,925.8 கோடி

எச்.டி.எப்.சி. நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.2,925.8 கோடி ஈட்டியுள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் ஒன்றும், அடமான கடன் வழங்கும் நிறுவனமான எச்.டி.எப்.சி. நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எச்.டி.எப்.சி. நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.2,925.8 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 65.1 சதவீதம் குறைவாகும். 2019 டிசம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனம் நிகர லாபமாக ரூ.8,372.5 கோடி ஈட்டியிருந்தது.

வட்டி வருவாய் அதிகரித்தும் லாபம் சுமாருதான்… எச்.டி.எப்.சி. லாபம் ரூ.2,925.8 கோடி
எச்.டி.எப்.சி. நிறுவனம்

2020 டிசம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் (வட்டி வருவாய்க்கும், வட்டி செலவுக்கும் இடையிலான வித்தியாசம்) ரூ.4,068 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகமாகும். கடந்த டிசம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனம் வரி செலவினமாக ரூ.826.7 கோடி மேற்கொண்டுள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 7.3 சதவீதம் அதிகமாகும்.

வட்டி வருவாய் அதிகரித்தும் லாபம் சுமாருதான்… எச்.டி.எப்.சி. லாபம் ரூ.2,925.8 கோடி
எச்.டி.எப்.சி. நிறுவனம்

2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.11,707 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 42.3 சதவீதம் குறைவாகும்.