வட்டி வருவாய் அமோகம்.. லாபமாக ரூ.8,186 கோடி அள்ளிய எச்.டி.எப்.சி. வங்கி

 

வட்டி வருவாய் அமோகம்.. லாபமாக ரூ.8,186 கோடி அள்ளிய எச்.டி.எப்.சி. வங்கி

2021 மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.8,186.50 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி. வங்கி தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.8,186.50 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டை காட்டிலும் 18.2 சதவீதம் அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி நிகர லாபமாக ரூ.6,927.69 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

வட்டி வருவாய் அமோகம்.. லாபமாக ரூ.8,186 கோடி அள்ளிய எச்.டி.எப்.சி. வங்கி
எச்.டி.எப்.சி. வங்கி

எச்.டி.எப்.சி. வங்கியின் நிகர வட்டி வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் 12.6 சதவீதம் உயர்ந்து ரூ.17,120.15 கோடியாக அதிகரித்துள்ளது. அந்த வங்கி வழங்கிய கடன் 14 சதவீதம் அதிகரித்ததே நிகர வட்டி வருவாய் அதிகரிப்பு முக்கிய காரணம். 2020 மார்ச் காலாண்டில் அந்த வங்கி நிகர வட்டி வருவாயாக ரூ.15,204.06 கோடி ஈட்டியிருந்தது. 2021 மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கியின் வட்டியில்லாத வருவாய் (இதர வருவாய்) 25.9 சதவீதம் உயர்ந்து ரூ.7,593.91 கோடியாக உயர்ந்துள்ளது.

வட்டி வருவாய் அமோகம்.. லாபமாக ரூ.8,186 கோடி அள்ளிய எச்.டி.எப்.சி. வங்கி
எச்.டி.எப்.சி. வங்கி

2021 மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கியின் மொத்த செலவினம் 18.1 சதவீதம் அதிகரித்து ரூ.2,652.56 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில், எச்.டி.எப்.சி. வங்கியின் மொத்த வாராக்கடன் 1.32 சதவீதமாக உள்ளது. அதேசமயம் நிகர வாராக்கடன் 0.40 சதவீதமாக உள்ளது.