வட்டி வருவாய் சூப்பர்… லாபமாக ரூ.8,758 கோடி அள்ளிய எச்.டி.எப்.சி. வங்கி..

 

வட்டி வருவாய் சூப்பர்… லாபமாக ரூ.8,758 கோடி அள்ளிய எச்.டி.எப்.சி. வங்கி..

2020 டிசம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.8,758.3 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி. வங்கி தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 டிசம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.8,758.3 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டை காட்டிலும் 18.1 சதவீதம் அதிகமாகும்.

வட்டி வருவாய் சூப்பர்… லாபமாக ரூ.8,758 கோடி அள்ளிய எச்.டி.எப்.சி. வங்கி..
எச்.டி.எப்.சி. வங்கி

எச்.டி.எப்.சி. வங்கியின் நிகர வட்டி வருவாய் கடந்த டிசம்பர் காலாண்டில் 15.1 சதவீதம் உயர்ந்து ரூ.16,317.60 கோடியாக அதிகரித்துள்ளது. அந்த வங்கி வழங்கிய கடன் 15.6 சதவீதம் அதிகரித்ததே நிகர வட்டி வருவாய் அதிகரிப்பு முக்கிய காரணம். கடந்த டிசம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, எச்.டி.எப்.சி. வங்கியின் மொத்த வாராக்கடன் 0.27 சதவீதம் குறைந்து 0.81 சதவீதமாக உள்ளது. அதேசமயம் நிகர வாராக்கடன் 0.09 சதவீதமாக குறைந்துள்ளது.

வட்டி வருவாய் சூப்பர்… லாபமாக ரூ.8,758 கோடி அள்ளிய எச்.டி.எப்.சி. வங்கி..
எச்.டி.எப்.சி. வங்கி

2020ம் ஆண்டில் எச்.டி.எப்.சி. வங்கி பங்கு விலை 13 சதவீதம் உயர்ந்தது. கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி பங்கு விலை 33.2 சதவீதம் உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவின் போது, எச்.டி.எப்.சி. வங்கி பங்கு விலை முந்தைய தினத்தை காட்டிலும் 0.12 சதவீதம் குறைந்து ரூ.1,466.35ஆக இருந்தது.