லாக்டவுன் காலத்திலும் அசரவில்லை….ரூ.6,658 கோடி லாபம் ஈட்டிய எச்.டி.எப்.சி. வங்கி

லாக்டவுன் காலத்திலும் அசரவில்லை….ரூ.6,658 கோடி லாபம் ஈட்டிய எச்.டி.எப்.சி. வங்கி

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி. வங்கி கடந்த ஜூன் காலாண்டு (ஏப்ரல்-ஜூன்) முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி நிகர லாபமாக ரூ.6,658 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 19.8 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பெரும்பாலான நாட்களில் லாக்டவுன் அமலில் இருந்தபோதிலும், எச்.டி.எப்.சி. வங்கியின் லாபம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன் காலத்திலும் அசரவில்லை….ரூ.6,658 கோடி லாபம் ஈட்டிய எச்.டி.எப்.சி. வங்கி

2020 ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, எச்.டி.எப்.சி. வங்கி வழங்கிய மொத்த கடன் 20.9 சதவீதம் அதிகரித்து ரூ.10.03 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் அந்த வங்கி திரட்டிய டெபாசிட் 24.6 சதவீதம் அதிகரித்து ரூ.11.89 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஜூன் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கியின் நிகர வருவாய் (வட்டி வருவாய் மற்றும் இதர வருவாய்) ரூ.19,741 கோடியாக உயர்ந்துள்ளது.

லாக்டவுன் காலத்திலும் அசரவில்லை….ரூ.6,658 கோடி லாபம் ஈட்டிய எச்.டி.எப்.சி. வங்கி

கடந்த ஜூன் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கியின் செயல்பாட்டு செலவினம் 2.9 சதவீதம் குறைந்து ரூ.6,912 கோடியாக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி செயல்பாட்டு செலவினமாக ரூ.7,117 கோடியை செலவு செய்து இருந்தது. செயல்பாட்டு செலவினம் குறைந்ததும் வங்கியின் லாபம் அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.