வட்டி, இதர வருவாய் அமோகம்.. ரூ.7,730 கோடி லாபம் ஈட்டிய எச்.டி.எப்.சி. வங்கி..

வட்டி, இதர வருவாய் அமோகம்.. ரூ.7,730 கோடி லாபம் ஈட்டிய எச்.டி.எப்.சி. வங்கி..

எச்.டி.எப்.சி. வங்கி 2021 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.7,729.64 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி. வங்கி தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. எச்.டி.எப்.சி. வங்கி 2021 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.7,729.64 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டை காட்டிலும் 16.1 சதவீதம் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி லாபமாக ரூ.6,658.62 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

வட்டி, இதர வருவாய் அமோகம்.. ரூ.7,730 கோடி லாபம் ஈட்டிய எச்.டி.எப்.சி. வங்கி..
எச்.டி.எப்.சி. வங்கி

2021 ஜூன் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கியின் நிகர வட்டி வருவாய் 8.6 சதவீதம் உயர்ந்து ரூ.17,009 கோடியாக அதிகரித்துள்ளது. அதே காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி வழங்கிய கடன் 14.4 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2021 ஜூன் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கியின் வட்டியில்லாத வருவாய் (இதர வருவாய்) 54.3 சதவீதம் உயர்ந்து ரூ.6,288.5 கோடியாக உயர்ந்துள்ளது.

வட்டி, இதர வருவாய் அமோகம்.. ரூ.7,730 கோடி லாபம் ஈட்டிய எச்.டி.எப்.சி. வங்கி..
எச்.டி.எப்.சி. வங்கி

கடந்த ஜூன் காலாண்டு இறுதி நிலவரப்படி, எச்.டி.எப்.சி. வங்கியின் மொத்த வாராக் கடன் 1.47 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 0.48 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது எச்.டி.எப்.சி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.34 சதவீதம் குறைந்து ரூ.1,470.95 ஆக இருந்தது.