லாபம் அதிகரிப்பு.. வாராக்கடன் குறைந்தது… வட்டி வருவாய் உயர்வு.. எச்.டி.எப்.சி. வங்கி ஹேப்பி

லாபம் அதிகரிப்பு.. வாராக்கடன் குறைந்தது… வட்டி வருவாய் உயர்வு.. எச்.டி.எப்.சி. வங்கி ஹேப்பி

2020 செப்டம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.7,513.10 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி. வங்கி தனது செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 செப்டம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.7,513.10 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டை காட்டிலும் 18.4 சதவீதம் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கியின் நிகர லாபம் ரூ.6,344.99 கோடியாக இருந்தது.

லாபம் அதிகரிப்பு.. வாராக்கடன் குறைந்தது… வட்டி வருவாய் உயர்வு.. எச்.டி.எப்.சி. வங்கி ஹேப்பி
எச்.டி.எப்.சி. வங்கி

2020 செப்டம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கியின் நிகர வட்டி வருவாய் ( வழங்கி கடன் வாயிலாக கிடைக்கும் வட்டி வருவாய்க்கும், டெபாசிட்தாரர்களுக்கு வங்கி வழங்கும் வட்டிக்கும் இடையிலான வித்தியாசம்) 16.7 சதவீதம் உயர்ந்து ரூ.15,776.40 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கியின் நிகர வருவாய் ரூ.13,515 கோடியாக இருந்தது.

லாபம் அதிகரிப்பு.. வாராக்கடன் குறைந்தது… வட்டி வருவாய் உயர்வு.. எச்.டி.எப்.சி. வங்கி ஹேப்பி
எச்.டி.எப்.சி. வங்கி

கடந்த செப்டம்பர் காலாண்டு இறுதியில் எச்.டி.எப்.சி. வங்கியின் மொத்த வாராக்கடன் 1.08 சதவீதமாக குறைந்துள்ளது. 2020 ஜூன் காலாண்டு இறுதியில் எச்.டி.எப்.சி. வங்கியின் மொத்த வாராக்கடன் 1.36 சதவீதமாக உயர்ந்து இருந்தது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, எச்.டி.எப்.சி. வங்கி திரட்டிய டெபாசிட் 20.30 சதவீதம் அதிகரித்து 12.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இந்த வங்கி வழங்கி கடன் 15.8 சதவீதம் உயர்ந்து ரூ.10.38 லட்சம் கோடியாக உள்ளது.